ஜெயலலிதா பொதுக் கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி சாவு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டி கிராமத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரத்தைக் காண வந்த மூதாட்டிகூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.பாறைப்பட்டி பகுதியில் மாலையில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். ஜெயலலிதாவைக் காண கிராமத்தினர் பெரும்எண்ணிக்கையில் திரண்டிருந்தனர்.

ஜெயலலிதா பாறைப்பட்டியை நெருங்கி விட்டார் என்ற தகவல் கிடைத்ததும், கூட்டத்தினர் முண்டியடித்தனர்.இதனால் அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதில் பொன்னு கண்ணம்மாள் என்ற66 வயது மூதாட்டி நெரிசலில் சிக்கி இறந்தார்.

சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் ஜெயலலிதா பொன்னு கண்ணம்மாளின் குடும்பத்தினருக்கு ரூ. 50,000 இழப்பீடுவழங்க உத்தரவிட்டார்.

மதுரையில் இன்று பிரசாரம்:

தேனியில் பொதுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா திண்டுக்கல், பெரியகுளம் தொகுதிகளில் பிரசாரம் செய்த இன்று மதுரைவருகிறார். வழியில் அவர் ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டி, டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் ஆகிய ஊர்களில் பிரசாரம்மேற்கொள்கிறார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸுக்குஆதரவாக அவர் வாக்கு சேகரிக்கிறார்.

ஜெயலலிதா வருகையையொட்டி மதுரை நகரில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறைஆணையர் விஜயக்குமார் தெரிவித்துள்ளார். மொத்தம் 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகஅவர் தெரிவித்தார்.

மதுரை கூட்டத்தை முடித்துக் கொண்டு நாளை ஓய்வெடுக்கும் ஜெயலலிதா புதன்கிழமை ராமநாதபுரம் புறப்பட்டுச் செல்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+