ஜெயலலிதா ஆபாசமாய் பேசித் திரிகிறார்: கருணாநிதி
விழுப்புரம்:
மக்கள் பிரச்சனைகளில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
விழுப்புரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் திண்டிவனம் பா.ம.க. வேட்பாளர் தன்ராஜை ஆதரித்துகருணாநிதி பேசியதாவது:
நாட்டுப் பிரச்சனை, வீட்டு பிரச்சனையை விட தங்களை வாட்டும் தண்ணீர் பிரச்சனைகாரணமாகத்தான் பெண்கள் இங்கு குவிந்திருக்கிறீர்கள்.
தன்னை அம்மா என்று சொல்லிக் கொள்கிற ஜெயலலிதா அம்மாவின் இடத்தில் இருந்து என்ன பேசவேண்டுமோ, அதைப் பேசாமல் ஆபாசமாக பேசி வருகிறார்.
பிரசாரத்தின்போது, ஆட்சியின் சாதனைகளைப் பட்டியல் போட்டு ஓட்டு கேட்க வேண்டும். அதை விட்டு விட்டுகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அந்நிய நாட்டுக்காரி என்று விமர்சனம் செய்கிறார்.
கணவர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்பும் இத்தாலிக்கு ஓடாமல் இந்தியாவில் இருப்பவருக்குபிரதமராகத் தகுதி இல்லையா? கடந்த 99ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்த கையோடு, சோனியாவின்வீட்டுக்குச் சென்று அடுத்த பிரதமர் நீங்கள்தான் என்று சொன்னவர் தானே இந்த ஜெயலலிதா.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில், அடுத்த பிரதமர் சோனியாதான் என்று நான்அறிவிக்கிறேன். மக்கள் பிரச்சனைகளை, சோனியா வெளிநாட்டவர் என்ற வாதத்தை பெரிதுபடுத்தி தனது அரசின்தோல்விகளை ஜெயலலிதா மறைக்கப் பார்க்கிறார்.
பின்தங்கிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்துவதற்கு நான் வாங்கியவசைமொழிகளும், நான் பட்ட பாடும் ராமதாஸ் போன்றோர் அறிவார்கள். மிகவும் பின் தங்கிய சமூகத்தில்பிறக்காவிட்டாலும் அவர்களின் வளர்ச்சிக்காக பெரியார், அண்ணா வழியில் பாடுபடுகிறோம். அதற்காகத்தான்என் தலைமையில் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
முதலில் நடந்த கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கே அதிக இடம் கிடைக்கும் என்று கூறப்பட்டது. இப்போது காற்றுமாறி வீசுகிறது என்றார் கருணாநிதி.
மதுராந்தகத்தில் பிரசாரம்:
மதுராந்தகத்தில் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:
மதுராந்தகம் பகுதியில் 50 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட நெல் அரவை ஆலைகள்மூடப்பட்டன. இவைதான் இந்த ஆட்சியின் சாதனைகள்.
மதுராந்தகத்தில் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க திமுக ஆட்சியில் ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் வந்தஅதிமுக ஆட்சியின் மெத்தனத்தால் அந்தத் திட்டம் இன்னும் முடிவடையவில்லை. அதிமுக ஆட்சி சாதி வெறிக்குஆதரவான ஆட்சியாகும். இதை முடிவுக்குக் கொண்டு வரும் நாள்தான் மே 10ம் தேதி என்றார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications