வி.சிறுத்தைகள் பிரமுகர் மீது பொய் வழக்கு: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர் மீது தமிழக போலீசார் பொய் வழக்குபோட்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி அசோக் குமார் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த செல்வம் என்ற செல்வப்பெருந்தகை நீதிமன்றத்தில்ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், தன் மீது சென்னை போலீசார் பொய்யாக கொலை முயற்சி வழக்கு உள்பட 4 வழக்குகளைப்போட்டுள்ளதாகவும், இந்த வழக்குகள் தொடர்பாக பொய்யான 4 எப்.ஐ.ஆர்களைப் பதிவுசெய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசாரிடம் இருந்து நீதிபதி அசோக் குமார் ஆவணங்களைக் கேட்டு வாங்கினார்.அவற்றை நீதிபதி சோதனையிட்டபோது பல குளறுபடிகள் நடந்துள்ளது தெரியவந்தது.
இந்த வழக்கில் செல்வத்தின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்குத் தடை விதித்துகடந்த பிப்ரவரி 5ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், மாஜிஸ்திரேட் நீதிமன்ற ஊழியர் ஒருவரின் உதவியுடன் அன்றைய தினம் காலையிலேயேஇந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது போல போலி ஆவணங்களை சென்னைசாஸ்திரி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உருவாக்கியுள்ளார்.
நீதிபதி அசோக்குமார் நீதிமன்ற மற்றும் போலீஸ் ஆவணங்களை ஆய்வு செய்தபோது இந்த குட்டுவெளியானது.
இதையடுத்து இந்த வழக்கில் போலீசார் தாக்கல் செய்த 4 எப்.ஐ.ஆர்கள் குறித்து விசாரணை நடத்தசிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மோசடி செயலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ்அனுப்பவும் உத்தரவிட்டார்.
செல்வத்தின் மீது கொலை முயற்சி தவிர, சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரைத் தாக்கியது உள்பட 4வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற உத்தரவையடுத்து செல்வத்தின் மீதான வழக்குகள் உண்மையானது தானா இல்லைபோலீசார் ஜோடித்தார்களா என்பதை சிபிஐ விசாரிக்கும்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications