அதிமுக வன்முறைக்கு பதிலடி தர திமுகவினருக்கு கருணாநிதி உத்தரவு
திருச்சி:
தேர்தல் சமயத்தில் அதிமுகவினர் வன்றையில் ஈடுபட்டால் அதை திமுகவினர் அனுமதிக்கக் கூடாது என்று தொண்டர்களுக்குகருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சியில் மதிமுக வேட்பாளர் எல்.கணேசனுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் பேசிய கருணாநிதி,
வெற்றி தங்களைவிட்டுச் செல்கிறது என்பதை அதிமுகவினர் புரிந்து கொண்டுவிட்டனர். இதனால் தேர்தல் நேரத்தில் வன்முறைச்செயல்கள் மூலம் வெற்றியைத் தட்டிப் பறிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதை திமுகவினர் அனுமதிக்கக் கூடாது. மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து அவர்களது திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற மக்களின் ஆர்வமும்எங்களுக்குப் புரிகிறது என்றார் கருணாநிதி.
கடந்த தேர்தல்களில் அதிமுகவினர் பெருமளவில் வன்முறையாட்டம் போட்டனர். இந் நிலையில் கருத்துக் கணிப்புகளும், தமிழகதேர்தல் சூழலும் அதிமுகவுக்கு எதிராக உள்ளதால் வாக்குப் பதிவன்று அக் கட்சியினர் வன்முறையில் இறங்கலாம் என்றுஅஞ்சப்படுகிறது.
இந் நிலையில் அதிமுகவினரின் வன்முறையை அனுமதிக் கூடாது என்று சொல்லி திமுகவினருக்கு கருணாநிதிஉத்தரவிட்டிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications