மதுரை போலீஸ் கமிஷ்னரை மாற்ற தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
டெல்லி:
ராமதாசுக்கு கறுப்புக் கொடி காட்டிய ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட விஷயத்தில் ரசிகர்களுக்கு ஆதரவாக ஒருதலைப் பட்சமாகசெயல்பட்ட மதுரை மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமாரை உடனடியாக இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம்உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் விதிமீறல்கள் நடக்கவும் விஜய்குமார் அனுமதித்தால் இந்த அதிரடிநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு கருப்புக் கொடி காட்ட ரஜினி ரசிகர்கள் முயன்றனர். இதற்குகாவல்துறையினரின் அனுமதியை ரசிகர்கள் பெறவில்லை. இதையடுத்து கறுப்புக் கொடி காட்டிய ரஜினி ரசிகர்கள் மீது பாமகதொண்டர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.
இது தொடர்பாக ரஜினி ரசிகர்கள் சார்பில் மதுரை காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது.
அமைதியான முறையில் கருப்புக் கொடி காட்டியபோது பாமக தொண்டர்கள் தங்களைத் தாக்கியதாகவும், அதை ராமதாஸ்வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் ரஜினி ரசிகர்கள் தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுத்திருந்தனர்.
இதையடுத்து ராமதாஸ் உள்ளிட்ட பா.ம.கவினர் மீது கொலை முயற்சி வழக்கை பதிவு செய்தது மதுரை போலீஸ். மேலும்பா.ம.கவினர் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. அதில், தேர்தல்நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் மாநகர ஆணையர் விஜயக்குமார் நடந்து கொண்டுள்ளார். அரசியல் கட்சித்தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் ராமதாஸுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்று அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சமீபத்தில் சென்னை வந்த தேர்தல் ஆணையர் கோபால்சாமி காவல்துறையினரிடம் இது குறித்து கேள்விஎழுப்பினார். கறுப்புக் கொடி காட்ட ரசிகர்கள் உங்களிடம் அனுமதி வாங்கினார்களா என்று மதுரை கமிஷ்னரிடம் கோபால்சாமிகேட்டார்.
அதற்கு, இல்லை என விஜய்குமார் பதில் தர, கடுப்பான கோபால்சாமி, அப்படியென்றால் நீங்கள் என்ன சட்டம் ஒழுங்கைபராமரிக்கிறீர்கள் என்று கேட்க தலையை குனிந்து கொண்டார் விஜய்குமார்.
மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த நீங்கள், அனுமதியில்லாமல் கறுப்புக் கொடிகாட்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்க பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தார் விஜய்குமார்.
இக் கூட்டம் முடிந்தவுடன் ரஜினி ரசிகர்கள் 4 பேரை அவசரமாகக் கைது செய்தது மதுரை போலீஸ்.
இதற்கிடையே ஜெயலலிதாவின் மதுரை பிரசாரக் கூட்டத்தின்போது தேர்தல் விதிமீறல்கள் நடந்ததாகவும், அதை விஜய்குமார்கண்டு கொள்ளவில்லை என்றும் தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் பறந்தன.
ஜெயலலிதாவின் கூட்டத்துக்கு ஆட்களைத் திரட்ட தாசில்தார்கள் சிலரையும் அதிமுகவினர் பயன்படுத்தியதாக புகார்கள்எழுந்தன. இந்த வேலையில் தாசில்தார்கள் ஈடுபட்டதை வீடியோகிராபர்களை வைத்து படம் பிடித்தார் மதுரை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகன்.
வீடியோ எடுப்பதைப் பார்த்துவிட்டு தாசில்தார்கள் அங்கிருந்து தப்பியோடிய கேவலமான சம்பவமும் நடந்தது.
இந் நிலையில் விதிமீறல்களை அனுமதித்தது, ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்தது ஆகியவை நிரூபிக்கப்பட்டதையடுத்து மதுரைகமிஷ்னர் விஜயக்குமாரை உடனடியாக இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் நகலை முதல்வர் ஜெயலலிதாவுக்கே நேரடியாக அனுப்பி வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை சரியான முறையில் கடைப்பிடிக்காததால் விஜயக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகஅந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயக்குமார் மிகச் சிறந்த அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆணையராக பதவியேற்ற பிறகு மதுரையில் குற்றச்செயல்கள் வெகுவாக குறைந்தன. ரெளடிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். கட்டப் பஞ்சாயத்து, கந்துவட்டிக்கும்பலையும் அடக்கினார்.
ஆனால், தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியினரின் நெருக்குதலுக்கு அவர் வளைந்து கொடுத்து போக வேண்டிய நிலைஏற்பட்டதால் அதிரடி டிரான்ஸ்பருக்கு உள்ளாகியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications