வைகை ஆற்றில் குளியல் தொட்டிகளுக்கு தடை
சென்னை:
மதுரை வைகை ஆற்றின் கரைப் பகுதியில் குளியல் தொட்டிகள் அமைப்பதற்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் விதித்துள்ளதடை செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த மணி என்பவர் உள்ளிட்ட 9 பேர் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவில், மதுரை வைகை ஆற்றங்கரையில் நாங்கள் குளியல் தொட்டிகள் வைத்துள்ளோம். இதற்கான உரிமம்முடிவடைந்ததையடுத்து அதைப் புதுப்பிக்க ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விண்ணப்பித்தோம்.
ஆனால் உரிமத்தைப் புதுப்பிக்க முடியாது எனவும், குளியல் தொட்டிகள் வைக்க அனுமதி இல்லை என்றும் ஆட்சித் தலைவர்எங்களது மனுவை நிராகரித்து விட்டார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். ஆனால் இதில் எங்களதுமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஆற்றங்கரையோரமாக குளியல்தொட்டிகள் அமைப்பதால் ஆற்றில் தண்ணீர் செல்வதில் தடங்கல் ஏற்படுகிறது. மேலும் தொழில் கூடமாக ஆற்றங்கரை மாறிவருகிறது. இதனால்தான் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள் தினகர் மற்றும் முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மனுதாரர்களின் புகார்களைநிராகரித்ததோடு, மேல் முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications