விளம்பரம் இல்லாத சுத்தமான சுவர்கள்; வித்தியாசமான கிராமம்!
கோவை:
கோவை மாவட்டம் நாதம்பாளையம் என்ற கிராமத்தில், சுவர்களில் தேர்தல் விளம்பரம் எழுதக் கூடாது என ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அந்த கிராமத்தின் சுவர்கள் அனைத்தும் பளிச் என காணப்படுகின்றன.
அவிநாசி அருகே உள்ளது நாதம்பாளையம். விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த கிராமம் இது. இந்தக் கிராமத்தில்கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுவன்முறையில் முடிந்தது.
பலர் தாக்கப்பட்டனர். வீடுகளும் இடிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இனிமேல் எந்தக் கட்சியினரும் இங்கு சுவர் விளம்பரங்களை எழுதக் கூடாது என தடை விதித்தது கிராமபஞ்சாயத்து.
அதை இப்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையாக கடைப்பிடிக்கிறார்கள் இக் கிராம மக்கள்.
கிராமத்தில் உள்ள அனைத்து சுவர்களும் விளம்பரங்கள் இல்லாமல் படு சுத்தமாக காட்சி அளிக்கின்றன. சுவர் விளம்பரங்களைமட்டுமே இவர்கள் பகிஷ்காரம் செய்துள்ளனர். ஆனால் தேர்தல் நாளன்று தவறாமல் அனைவரும் வாக்களிப்போம் என்று கிராமமக்கள் உற்சாகத்துடன் கூறுகிறார்கள்.
-
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications