ஜீவஜோதி வழக்கில் அண்ணாச்சி ராஜகோபாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் அதிபர் ராஜகோபாலுக்கு 10ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தக் கொலையில் ராஜகோபால் மீதான குற்றச்சாட்டுசரிவர நிரூபிக்கப்படாததால் இந்த வழக்கில் கொலை நோக்கம் இல்லாத மரணம் என்ற பிரிவின் கீழ் அவருக்குதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ராஜகோபாலுக்கு ரூ. 50 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி, அதை ஜீவஜோதிக்குநஷ்ஈடாகத் தர உத்தரவிட்டார்.

கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் ஜீவஜோதி ஒரு புகார்கொடுத்தார்.

கடத்தப்பட்ட பிரின்ஸ், ஜீவஜோதி..

அதில், அக்டோபர் 18ம் தேதி தனது வீட்டுக்கு வந்த ராஜகோபால், தன் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரைஅடியாட்களைக் கொண்டு அடித்து உதைத்தாகவும், தனக்கு ஜீவஜோதியை திருமணம் செய்து கொடுத்துவிட்டுஒதுங்கிக் கொள்ளுமாறு சாந்தகுமாரை மிரட்டியதாகவும் அதில் ஜீவஜோதி கூறியிருந்தார்.

அதற்கு சாந்தகுமார் ஒப்புக் கொள்ள மறுத்ததால் அவரை ராஜகோபாலின் ஆட்கள் கடத்திச் சென்றுவிட்டதாகவும்,தன்னை திருநெல்வேலிக்குக் கடத்திச் சென்றதாகவும் ஜீவஜோதி புகாரில் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் விசாரணை தொடங்கிய நிலையில் கொடைக்கானல் அருகே பிரின்ஸ் சாந்தகுமாரின் அழுகியஉடல் கிடந்தது. இதனால் ராஜகோபாலின் ஆட்கள் தான் தனது கணவரைக் கொன்று மலையில் இருந்துஉருட்டிவிட்டதாக ஜீவஜோதி புகார் கூறினார்.

இதையடுத்து ராஜகோபால் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது அடியாட்களும் கைது செய்யப்பட்டனர்.பிரின்ஸ் அக்டோபர் 26ம் தேதி கொலை செய்யப்பட்டதாக போலீசார் கூறினர்.

நெருக்கம் அம்பலம்..

இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தபோது ஜீவஜோதி குடும்பத்துக்கும் ராஜகோபாலுக்கும் இடையே நிலவி வந்தநெருக்கம், ஜீவஜோதியை அடைய அவரது தாயார் தவமணி மூலம் ராஜகோபால் முயன்றது ஆகியவை குறித்து பலபரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்தக் கொலை வழக்கும் ஜீவஜோதி கடத்தப்பட்ட வழக்கும் பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்விசாரிக்கப்பட்டு வந்தது.

இந் நிலையில் 2001ம் ஆண்டு ஜீவஜோதியை வேதாரண்யத்தில் உள்ள அவரது மாமாவின் வீட்டில் இருந்துராஜகோபால் கடத்த முயன்றதாக மூன்றாவது வழக்கும் பதிவானது.

சாட்சிகள் அடுத்தடுத்து பல்டி..

சாந்தகுமார் கொலை வழக்கு மற்றும் ஜீவஜோதி கடத்தப்பட்ட வழக்கு ஆகிய இரண்டிலும் சமீபத்தில் விசாரணைமுடிவடைந்தது. விசாரணையின்போது 14 சாட்சிகள் ராஜகோபாலுக்கு ஆதரவாக பல்டி அடித்தனர். சாந்தகுமாரின்சகோதரரே கூட, கொடைக்கானலில் கண்டுபிடிக்கப்பட்டது தனது தம்பியின் உடல் தானா என்பதில் சந்தேகம்உள்ளதாகக் கூறிவிட்டார்.

சாட்சிகளை ராஜகோபால் வாங்கிவிட்டதாக புகார்கள் எழுந்தன. அதே நேரத்தில் ஜீவஜோதியை வைத்து தன் மீதுபோலீசார் பொய் கேஸ் போட்டுள்ளதாகவும், கிண்டி உதவி போலீஸ் கமிஷ்னர் ராமச்சந்திரன் இந்த கேசில்அளவுகடந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் ராஜகோபால் தரப்பு கூறி வந்தது.

இந் நிலையில சமீபத்தில் இந்த வழக்குகளில் வழக்கறிஞர்களின் வாதம் முடிவடைந்தது. இதையடுத்து கடந்த 16ம்தேதி இந்த இரு வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது.

ஆனால், ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவற்றைப் படித்துப் பார்க்க நிறைய அவகாசம்தேவைப்படுவதாகவும், எனவே வருகிற 26ம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி செல்வக்குமார்அறிவித்தார்.

தாயார் தவமணியும் குற்றவாளியே..

இதனையடுத்து இன்று காலை நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார். நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது:

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை ராஜகோபால் திட்டமிட்டுக் கொலை செய்ததாக 302வது பிரிவின்கீழ் போலீசார் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால், சந்தர்ப்ப சாட்டியங்களைப் பார்க்கும்போது, ஜீவஜோதியைஅடைவதற்கு ராஜகோபாலுக்கு ஜீவஜோதியின் தாயார் தவமணி தான் தூண்டுகோலாக இருந்தது தெரியவருகிறது.

எனவே இந்த வழக்கை, 304(1)வது பிரிவான கொலை நோக்கம் இல்லாமல் மரணம் விளைவித்தல் என்ற சட்டப்பிரிவின் கீழ் மாற்றி அதன் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட குற்றங்களை வைத்து தீர்ப்பு வழங்குகிறேன்.

கொலை செய்யும் உள்நோக்கம் ஏதும் இல்லாமல் தான் பிரின்ஸ் சாந்தகுமாரின் மரணம் நிகழ்ந்துள்ளது.

கடுங்காவல், ரூ. 50 லட்சம் அபராதம்..

இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்குகிறேன். மேலும் அவருக்கு ரூ. 50லட்சம் அபராதமும் விதிக்கிறேன். இதை கணவரை இழந்த ஜீவஜோதிக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டும்.

ஜீவஜோதியை திருமணம் செய்து வைப்பதாக ராஜகோபாலுக்கு ஆசையை ஊட்டியதே ஜீவஜோதியின் தாயார்தவமணி தான் என்று தெரிய வருவதால் அவரும் குற்றவாளி தான்.

பிரின்ஸை கடத்த உதவிய ராஜகோபாலின் உதவியாளரான டேனியேலுக்கு 9 வருட கடுங்காவல் தண்டனையும்ரூ. 50,000 அபராதமும் விதிக்கிறேன். கடத்தலில் ஈடுபட்ட கார்மேகம், உசேன, காசி ஆகியோருக்கு தலா 7 வருடகடுங்காவல் தண்டனையும், தலா ரூ. 30,000 அபராதமும் விதிக்கப்படுகிறது.

இவர்களின் இன்னொரு கூட்டாளியான பட்டுராஜனுக்கு 6 வருட கடுங்காவலும், ரூ. 30,000 அபராதமும்,தமிழ்ச்செல்வன், சேது, முருகானந்தம் ஆகியோருக்கு 4 வருட கடுங்காவல் தண்டனையும் ரூ. 5,000மும் அபராதம்விதிக்கிறேன் என்றார் நீதிபதி.

கடத்தல் வழக்கு:

பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்பட்ட அதே நாளில் ஜீவஜோதியும் கடத்தப்பட்ட வழக்கிலும் ராஜகோபால்தான் முதல்குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தனியாக தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

ராமச்சந்திரனுக்கு விழுந்த குட்டு:

அப்போது குறுக்கிட்ட கிண்டி உதவி போலீஸ் கமிஷ்னர் ராமச்சந்திரன், இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு கூடுதல்தண்டனை அளித்திருக்க வேண்டும் என்றார்.

இதனால் கோபமடைந்த நீதிபதி, நீங்கள் வாயை மூடுங்கள், நீங்கள் காவல் துறை அதிகாரி தான், அதற்காகநீதிமன்ற நடவடிக்கைகளில் எல்லாம் தலையிட முடியாது என்று கூறி அவரை உட்கார வைத்தார்.

தீர்ப்பையொட்டி ராஜகோபால் உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவரும் இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகிஇருந்தனர்.

விசித்திர தீர்ப்பு..அரசு வழக்கறிஞர்:

தீர்ப்பு குறித்து அரசு வழக்கறிஞர் வீரராகவன் கருத்து தெரிவிக்கையில், இந்தத் தீர்ப்பு விசித்திரமாக உள்ளது. இதுஎங்களுக்குத் திருப்தி தரவில்லை. 302வது பிரிவின் கீழ் தான் தண்டனை வழங்கியிருக்க வேண்டும். இந்தத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என்றார்.

அதே போல தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாங்களும் மேல்முறையீடு செய்யப் போவதாகராஜகோபால் தரப்பினரும் கூறினர்.

அண்ணாச்சியின் லீலைகள்:

அண்ணாச்சி ராஜகோபால் தனது ஹோட்டலில் வேலை பார்த்த ஊழியரை மிரட்டி, அவரை விரட்டிவிட்டு, அவரது மனைவிகிருத்திகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இவரது முதல் மனைவிக்கு இரு மகன்கள் உள்ளனர்.

ஜீவஜோதியின் தந்தை சரவண பவன் ஹோட்டலில் மேனேஜராகப் பணியாற்றி வந்தார். அப்போது ஜீவஜோதி குடும்பத்திற்குள்காலடி வைத்த அண்ணாச்சிக்கு ஜீவஜோதியின் மீது பார்வை விழுந்தது. இதையடுத்து அவரை அடைய அண்ணாச்சி முயல, அதற்குள்ஜீவஜோதி-பிரின்ஸ் சாந்தகுமார் காதல் உருவாகி திருமணமாகிவிட்டது.

ராஜகோபாலின் சொத்து மீது ஆர்வம் கொண்ட தவமணி தனது மகள் ஜீவஜோதியைஅவருக்குத் திருமணம் செய்து வைப்பதாக சொல்லி ஆசையைத் தூண்டி வந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. தவமணியே கூட அண்ணாச்சிக்கு நெருக்கம் தான் என்றும் கூட சிலபத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன.

இத்தனைக்கும் அண்ணாச்சி பெரும் முருக பக்தர், கிருபானந்த வாரியார் உயிரோடு இருந்தவரைஇவரது சரவண பவன் கிளைகளை அவர் தான் துவக்கி வைத்தார். ஹோட்டல் தொழிலில் மாபெரும்சாதனைகள் படைத்த அண்ணாச்சியின் பெண் சபலம் அவரை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+