திருமண விவகாரம்: தாய் கொலை- மகள் தற்கொலைக்கு முயற்சி
சென்னை: -
தனக்கு 32 வயதாகியும் திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகள் தாயைக் கொன்றுவிட்டு தானும்விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.
சென்னை வில்லிவாக்கம் நேரு நகரை சேர்ந்தவர் பொன்னம்பலம்- கமலா (60) தம்பதின் மகள் சாந்தி (32).சாந்திக்கு இன்னும் திருமணமாகவில்லை. பொன்னம்பலம் தனது மனைவியைப் பிரிந்து தனியே வசித்துவருகிறார்.
தாயுடன் வசித்து வந்த சாந்தி, தனக்கு வயதாகிக் கொண்டே போகும் நிலையில் தனது திருமணத்துக்கு தயார் எந்தமுயற்சியும் செய்யவில்லை என்ற வேதனையில் இருந்து வந்தார். தனது வயதைக் குறிப்பிட்டு அக்கம் பக்கத்தினர்கேலி செய்ததால் தாய்-மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந் நிலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 2 பூச்சி மருந்தையும்குளிர்பானத்தையும் வாங்கி வந்த சாந்தி, அதைக் குடித்து இருவரும் செத்துப் போகலாம் என்று கூறியுள்ளார்.
தாயாருக்கு பூச்சி மருந்து கலந்த குளிர்பானத்தைத் தந்துள்ளார். அதை கமலா குடிக்க மறுக்கவே, இருவருக்கும்தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தாயார் கமலாவை கீழே தள்ளியுள்ளார் சாந்தி. இதில் கமலாவுக்கு தலையில்பலத்த அடிபட்டு, மயக்கமானார். இதையடுத்து பூச்சி மருந்தை குடித்த சாந்தி மயங்கி விழுந்தார்.
சாந்தி வாயில் நுரை தள்ளியும், தாயார் மயங்கியும் கிடப்பதைக் கண்ட அப் பகுதியினர் பொதுமக்கள்வில்லிவாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனே போலீஸார் விரைந்து வந்து மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் சிகிச்சைக்காக சென்னைகீழ்ப்பாக்கம் அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர்.
கமலாவின் நிலை அபாயகரமாக இருந்ததால் பின்னர் அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து சாந்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications