பூசாரிகள் இல்லாத திருமணங்கள் அதிகரிப்பு: கருணாநிதி பெருமிதம்
சென்னை:
தமிழகத்தில் சுய மரியாதைத் திருமணங்கள் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறதுஎன்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் இல்லத் திருமணம் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதிகலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார்.
பின்னர் அவர் பேசுகையில், தமிழகத்தில் இன்று பல திருமணங்கள் பூசாரிகள், ஹோமங்கள் இல்லாதுநடைபெறுகின்றன. இதுபோன்ற திருமணங்களை ஊக்குவிக்க பெரியாரும், அண்ணாவும், புரட்சிக்கவிபாரதிதாசனும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கவில்லை என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
திருமணங்களில் ஹோமங்களுக்குப் பதில், முக்கியஸ்தர்களின் பேச்சுக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும் என்றுபெரியாரும், அண்ணாவும் விரும்பினார்கள். அது இன்றைக்கு நடந்து வருகிறது. அவர்கள் சொன்னது வீணாகிவிடவில்லை.
40ம் ஆண்டுகளின் காலகட்டத்தில் சுயமரியாதை இயக்க திருமணங்கள் குறித்து பிரசாரம் செய்யச் சென்றால்அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்படும். எங்களை ஏசுவார்கள், அதுபோன்ற கூட்டத்திற்கு 50 பேர்தான் வருவார்கள்.அவர்களும் நாங்கள் பேசுவதை முழு மனதுடன் ஏற்காமல் திரும்பிச் செல்வார்கள். சில பேர் எங்களை சபிப்பார்கள்என்றார் கருணாநிதி.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications