அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: வைகை ஆற்றுக்கு லாரிகளில் வரும் நீர்
மதுரை:
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காகவைகோ ஆற்றில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வரும் மே 4ம் தேதி நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக வைகை அணையில்இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இந் நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள்ஆற்றங்கரையில் கூடுவார்கள்.
ஆனால், கடந்த பல ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் வைகை அணையிலும் ஆற்றிலும் நீர்இல்லை. வெறும் சாக்கடை நீர் தான் ஓடுகிறது.
கடந்த ஆண்டு சுத்தமாகத் தண்ணீரே இல்லாத ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது, இதுபக்தர்களின் மனதைப் புண்படுத்தியது.
இதையடுத்து இந்த ஆண்டு அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் மட்டுமாவது தண்ணீரைத் தேக்கிவைக்கும் வகையில், வாய்க்கால் தோண்டி, அதைச் சுற்றி மணல் மூட்டைகள் வைத்து நீரைத் தேக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படும். இந்த இடத்தில் அழகர்ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கும்.
அழகர் ஆற்றில் இறங்கியவுடன் அந்தப் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்படும்.
அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியையொட்டி மக்கள் மொட்டை போட்டுக் கொள்வது வழக்கம்.ஆனால், மொட்டை போட்ட பின் குளிக்கத் தண்ணீர் இல்லாததால் கடந்த முறை தலையில் மினரல்வாட்டர் பாட்டில்களை தலையில் கவிழ்க்க வேண்டிய நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டனர்.
இதைத் தவிர்க்க மொட்டை போடும் பக்தர்கள் குளிக்க வசதியாக ஆழ்வார்புரம், ராமராயர்மண்டபம், வண்டியூர் சாலை, ஓபுளாபடித்துறை ஆகிய வைகை ஆற்றுக் கரைப் பகுதிகளில்நூற்றுக்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் அமைக்கவும், அவற்றில் லாரிகள் மூலம் தண்ணீர்நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடிநீருக்கும் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. தாற்காலிக கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுவருகின்றன. லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் பிளீச்சிங் பவுடரைத் தூவி ஆற்றின்கரையோரங்கள் சுகாதாரமாக்கப்பட்டு வருகின்றன.
திருவாரூர் ஆழித் தேரோட்டம்:
இந் நிலையில் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தின் ஆழித் தேரோட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையடுத்து திருவாரூரே ஜெகஜோதியாய் காட்சியளிக்கிறது.
பங்குனி உத்திரத் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த ஆழித்தேரோட்டம் நடக்கும். நாளை காலை 6மணி முதல் 6.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கவுள்ளது.
நிகழ்ச்சியில் லட்சக்கக்காண மக்கள் கூடுவர் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. தேரோட்டத்தையொட்டி திருவாரூரில் உள்ளூர் விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications