டெஸ்மா வழக்கை ரத்து செய்யக் கோரி இளங்கோவன் மனு
சென்னை:
தன் மீதான டெஸ்மா வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் மனு தாக்கல் செய்துள்ளார்.
வேலை நிறுத்தம் செய்ய அரசு ஊழியர்களைத் தூண்டிவிட்டதாக இளங்கோவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இப்போது கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இளங்கோவன், உயர் நீதிமன்றத்தில் போலீசாருக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில்,
மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மத்திய சென்னை அதிமுக வேட்பாளர் பாலகங்கா மற்றும் அமைச்சர்கள் மீதான வழக்குகளை தமிழக அரசும் காவல்துறையும் வாபஸ் பெற்றுள்ளன.
என் மீது தமிழக அரசு டெஸ்மா வழக்குத் தொடர்ந்து, அந்த விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அதிமுகவினர் மீதான வழக்குகளை மட்டும் வாபஸ் பெற்ற காவல்துறை என் மீதான வழக்கையும் வாபஸ் பெற உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
காளிமுத்து ஆஜராக உத்தரவு:
இதற்கிடையே ராபின் மெயின் மோசடி வழக்கு விசாரணைக்காக சபாநாயகர் காளிமுத்து வரும்ஜூலை மாதம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க உச்ச நீதிமன்றத்தில் காளிமுத்து தடை வாங்கியிருந்தார்.ஜூலை 19ம் தேதி வரை தான் இந்தத் தடை அமலில் இருக்கும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந் நிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் காளிமுத்து மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது,தடையை உச்ச நீதிமன்றம் நீடிக்காவிட்டால் ஜூலை 20ம் தேதி காளிமுத்து சிபிஐ நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என நீதிபதி ராமசாமி உத்தரவிட்டார்.
| |||||||||||||||||||
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications