சிபிஐ பிடியில் 12 சென்னை வருமான வரி அதிகாரிகள்
டெல்லி:
சென்னையை சேர்ந்த 12 வருமான வரித்துறை அதிகாரிகள் சிபிஐ பிடியில் சிக்கியுள்ளனர்.
மதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதித்துறை இணையமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனிடம் உதவியாளராகஇருந்த பெருமாள்சாமி, வருமான வரித்துறை அதிகாரிகளின் இடமாற்றல் தொடர்பாக லஞ்சம் வாங்கியதாக கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
பெருமாள்சாமியின் நண்பரான சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் சி.பி.ஐ.அதிகாரிகள் சோதனை நடத்தியபோது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் அவருக்கும் இடையே இருந்துவந்த சட்டவிரோதமான கூட்டணி தெரியவந்தது.
இதில் வருமான வரித்துறை அதிகாரிகள் பலருக்கும் ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி ஏகப்பட்ட செலவு செய்தவிவரமும், அதற்கு கைமாறாக ஆடிட்டரின் கிளையன்டுகளிக்கு அதிகாரிகள் வரி விலக்குகள் தந்ததும்தெரியவந்தது.
கிருஷ்ணமூர்த்தியின் உதவியால் பல தொழிலதிபர்கள் ரூ.30 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்திருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு சென்னையைச் சேர்ந்த 12 வருமான வரித்துறை அதிகாரிகளும் உடந்தையாகஇருந்துள்ளனர்.
இந்த 12 அதிகாரிகள் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் மீது வழக்கு பதிவு செய்யவும், துறை சார்ந்த நடவடிக்கைஎடுக்கவும் மத்திய நிதித்துறைக்கு சி.பி.ஐ. இயக்குனரகம் கடிதம் எழுதியுள்ளது.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 102 வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.பரிந்துரைத்துள்ளது. இந்த 102 பேரும் வட இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகளாவர்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications