அதிமுகவில் இணைந்தார் முன்னாள் திமுக அமைச்சர் ஜெனீபர் சந்திரன்
திருச்செந்தூர்:
திமுக முன்னாள் அமைச்சர் ஜெனீபர் சந்திரன் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
திருச்செந்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவாகவும், திமுக அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவர்ஜெனீபர் சந்திரன். இவர் திருச்செந்தூரில் ஜெயலலிதா பிரசாரம் செய்தபோது அவர் முன்னிலையில் அதிமுகவில்இணைந்தார்.
அதேபோல, திமுக செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணனும், ஜெயலலிதாமுன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
திமுகவில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரிந்து சென்றபோது அவருடன் சென்றவர்ராதாகிருஷ்ணன். பின்னர் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் கருணாநிதி, மறைந்தமத்திய அமைச்சர் முரசொலி மாறன், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோரின் நம்பிக்கைக்குப்பாத்திரமானவர்.
ஆனால் சமீபத்தில் வைகோ மீண்டும் திமுகவுடன் நட்பைப் புதுப்பித்தவுடன், ராதாகிருஷ்ணனுக்கு திமுகவில்முக்கியத்துவம் குறைந்தது. இதனால் அவர் திமுகவிலிருந்து விலகியுள்ளார். மேலும், கருணாநிதி, ஸ்டாலின் குறித்தபுத்தகத்தையும் அவர் விரைவில் வெளியிடப் போவதாக கூறப்படுகிறது.
தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு:
இதற்கிடையே, விவசாயிகளுக்கான ரூ. 400 கோடி கடன் தொகையை ரத்து செய்ததற்காக அதிமுகவுக்கு இந்ததேர்தலில் விவசாயிகள் ஆதரவு கொடுப்பார்கள் என்று தமிழக விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
சங்கத்தின் தலைவர் எம்.சிவசாமி இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏற்கனவே கடந்தசட்டசபைத் தேர்தலிலும் அதிமுகவுக்கே நாங்கள் ஆதரவு தந்தோம். அப்போது விவசாயிகளின் குறைகளைதீர்ப்போம் என்று அதிமுக அரசு கூறியது. அதை இப்போது நிறைவேற்றியுள்ளது. எனவே விவசாயிகளின் ஆதரவுஅதிமுகவுக்கே என்றார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications