வேலை தேடி வெளிநாடு செல்வோருக்கு அரசு அறிவுரை
சென்னை:
வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றுதமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவிலும், மலேசியாவிலும் செயல்படும் சில முகவரமைப்புகள் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துசுற்றுலா விசாவில் ஏராளமான தொழிலாளர்களை மலேசியாவிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
அவர்களுடைய விசா காலக் கெடு முடிவடைந்த பிறகு அவர்கள் மலேசியாவில் தங்கியிருப்பது சட்ட விரோதமாகிவிடுவதால், அங்குள்ள காவல் நிலையங்கள் மூலமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
எனவே வேலை தேடி மலேசியாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் செல்ல விரும்பும் தொழிலாளர்கள் தங்கள்வேலைவாய்ப்பு பற்றி முறையாக விசாரித்து அறிந்து கொள்வதோடு போதுமான முன்எச்சரிக்கைநடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்துகிறது.
இது தொடர்பாக ஆலோசனை பெற விரும்புவோர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வளாகம், அசோக்நகர்,சென்னை- - 83 என்ற முகவரியில் உள்ள மத்திய அரசு, தொழிலாளர் நல அமைச்சகத்தின் குடிபெயர்வுஅலுவலகத்தை அணுகலாம். இந்த அலுவலகத்தை 24891337 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டுதேவையான ஆலோசனைகளை பெறலாம்.
மேலும் 41, மெக்நிக்கல்ஸ் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை- - 31 என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு அரசுநிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தையும் (தொலைபேசி எண்: 28365099) அணுகிதேவையான விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications