கோவை, நீலகிரியிலும் வாஜ்பாய் பிரசாரம்?
சென்னை:
அதிமுக, பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழகத்தில் நாளுக்கு நாள் செல்வாக்கு படு மோசமாக சரிந்து கொண்டிருப்பதால்சென்னையில் மட்டுமின்றி, கோவை, நீலகிரி தொகுதிகளிலும் பிரதமர் வாஜ்பாயியின் பிரசாரத்திற்கு பா.ஜ.கமுயற்சி மேற்கொண்டுள்ளது.
தேசிய அளவில் பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும் அடி காத்திருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் அதிமுக, பா.ஜ.க. கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகளின்மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே தனது பிரசார உத்தியை பா.ஜ.க. மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போதைய திட்டப்படி அத்வானிமட்டுமே தமிழகத்தின் சில தொகுதிகளில் பிரசாரம் செய்வதாக உள்ளது. பிரதமர் வாஜ்பாய் சென்னையில் வரும்5ம் தேதி பிரசாரம் செய்கிறார். அவருடன் முதல்வர் ஜெயலலிதாவும் கலந்து கொள்கிறார்.
ஆனால் பா.ஜ.கவின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்து கொள்வதற்காக மேலும் 2 தொகுதிகளில் வாஜ்பாயைபிரசாரம் செய்ய வைக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. அதன்படி 5ம் தேதி சென்னை வரும் வாஜ்பாய் அன்று தீவுத்திடலில் நடக்கும் பிரசாரக் கூட்டத்திற்குப் பிறகு கோவை செல்வதாக திட்டமிடப்பட்டுள்ளது.
அங்கு பா.ஜ.க. வேட்பாளரும், தமிழக பா.ஜ.க. தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாஜ்பாய்பிரசாரம் செய்கிறார். பின்னர் நீலகிரி சென்று அங்கு போட்டியிடும் வேட்பாளர் மாஸ்டர் மாதனுக்கு ஆதரவாகபிரசாரம் செய்யவுள்ளார். அதன் பின்னர் அவர் டெல்லி செல்வார் என்று தெரிகிறது.
பா.ஜ.கவின் இந்தத் திட்டத்தின் மூலம், கோவை, நீலகிரி ஆகிய தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.கவுக்கு ஓரளவுக்குவெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தெரிய வருகிறது. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடும்நாகர்கோவில் தொகுதியில் வாஜ்பாய் பிரசாரம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து கணிப்புகளுக்கு கண்டனம்:
எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக, அவர்களது பின்னணியுடன் கருத்துக் கணிப்புகளை சம்பந்தப்பட்ட செய்திநிறுவனங்கள் வெளியிடுவதாக தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சமீபத்திய கருத்துக் கணிப்புகளைப் பார்க்கும்போது,எதிர்க்கட்சிகளின் பின்னணியுடன், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்கள்,தொலைக்காட்சி நிறுவனங்கள் கணிப்புகளை வெளியிடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்புகளால் சமீபத்தில் பங்குச் சந்தையில் ரூ. 53,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகசெய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு பொறுப்பேற்று இந்த செய்தி நிறுவனங்கள் மன்னிப்பு கூட கோரவில்லை.
கருத்துக் கணிப்புகள் மீது பா.ஜ.க. என்றுமே நம்பிக்கை கொண்டதில்லை. ஆனால் தற்போதைய கருத்துக்கணிப்புகள் நாட்டு நலனுக்கு விரோதமாக இருப்பதால் அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்அவர்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications