அதிமுக, பா.ஜ.கவின் விஷமப் பிரசாரம்: வாசன் சாடல்
தென்காசி:
அதிமுகவும், பா.ஜ.கவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து அவதூறாகவும், விஷமத்தனமாகவும்பிரசாரம் செய்து வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அப்பாதுரைக்குஆதரவாக வாசன் ஆலங்குளம் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு சாதனையும் பிரதமர் வாஜ்பாயிடமும், முதல்வர் ஜெயலலிதாவிடமும் இல்லை.
இதனால்தான் சோனியா காந்தி குறித்து விஷமப் பிரசாரத்தை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதைஅவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வளர்ச்சி, முன்னேற்றத்தில் இந்தியாவிலேயே கடைசி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. ஜெயலலிதாவின்ஆட்சியே இதற்குக் காரணம். இந்தியாவிலேயே மோசமான முதல்வர் என்ற பெயரை அவர் தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
தினசரி 20 மணி நேரம் உழைப்பதாக அடிக்கடி ஜெயலலிதா கூறிக் கொள்கிறார். ஆனால் அப்படி உழைத்தும்தமிழகத்தை முன்னேற்ற முடியவில்லை. யாருடைய முன்னேற்றத்திற்காக அவர் கடுமையாக உழைக்கிறார் என்றுதெரியவில்லை.
மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழப் போகிறது. இது காலத்தின் கட்டாயம். அதேபோல, தமிழகத்திலும் அரசியல்மாற்றம், ஆட்சி மாற்றம் விரைவில் ஏற்படும் என்றார் வாசன்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications