அதிமுகவில் சேர்ந்தது ஏன்? ஜெனிபர் சந்திரன் பேட்டி
திருச்செந்தூர்:
அதிமுகவில் சேர்ந்தது ஏன் என்பதற்கு முன்னாள் திமுக அமைச்சர் ஜெனிபர் சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன், முன்னாள் திமுக மாநில செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்ஆகியோர் திமுகவை விட்டு விலகி திருச்செந்தூரில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர்.
இந் நிலையில் ஜெனிபர் சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
திமுகவில் நான் அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தபோது திருச்செந்தூர் தொகுதி மக்களுக்காகசிறப்பாக பணியாற்றி வந்துள்ளேன். இருப்பினும் திமுகவில் எனக்கு முறையாக மரியாதை தரப்படவில்லை.
எனக்கு கட்சியில் ஏற்பட்ட அவமானங்களை நான் ரொம்ப காலம் பொறுத்து கொண்டு இருந்தேன்.
திமுகவில் சிரமப்பட்டு உழைத்தாலும் மரியாதை இருக்காது.சில நபர்களால் நல்ல பெயர் கிடைக்காது.அதனால்தான் கட்சியை விட்டு விலக நேர்ந்தது. திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக வெற்றிக்கு கடுமையாகஉழைப்பேன் என்று கூறினார்.
ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நடவடிக்கை பிடிக்காமல் எங்களை போன்றவர்கள் திமுகவுக்குசென்றோம். இப்போது வைகோவை திமுக தலைவர் கருணாநிதி அரவணைத்ததால் நாங்கள் பகடைக்காய்ஆனோம்.
இந் நிலையில் தமிழகத்தில் பயங்கரவாதம் கூடாது என்றும், காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்என்றும், கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்றும் பல்வேறு பிரச்சினைகளுக்காக ஜெயலலிதா பாடுபட்டுவருகிறார்கள்.
மேலும் திமுகவில் உழைப்பவர்களுக்கு வாய்ப்பு இல்லை. வெறுப்பின் அடிப்படையில் கட்சியை விட்டு வெளியேவரவில்லை. கொள்கை அடிப்படையில் தான் வெளியே வந்தேன் என்று கூறினார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications