பதற்றமான தொகுதிகளில் விடியோ காமிரா கண்காணிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் பதற்றம் நிறைந்த தொகுதிகள் வாக்குப் பதிவின் போது விடியோ காமிராக்களின் மூலம்கண்காணிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையர்கள் டாண்டன், கோபாலசுவாமி ஆகியோர் அளித்த பேட்டியில்கூறியதாவது:
தமிழகத்தில் வாக்குப்பதிவின் போது வன்முறை நிகழலாம் என்று அரசியல் கட்சிகள் அச்சம் தெரிவித்தன. அப்புகார்களைப் பரிசீலித்தோம். அத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க,
பதற்றம் நிறைந்த தொகுதிகள் அனைத்திலும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்படுவார்கள்.
நாங்கள் பயப்படவில்லை. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கையூட்டும் வகையில் துணைராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்படும்.
தென் சென்னை திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு தமது வேட்பு மனுவுடன் அளித்த பிரமாணப் பத்திரத்தில் தமக்கு 2மனைவிகள் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். அவர் இதைச் சொல்லாமல் இருந்திருந்தால்தான் விதிமீறல் ஆகும்.
தமிழகத்திலிருந்து 39 புகார்கள் வந்தன. 33-ன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. எஞ்சிய புகார்கள் குறித்து2 அல்லது 3 நாள்களுக்குள் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
வேட்பாளர்களிடமிருந்து திமுக அதிகப் பணம் வசூலித்ததாக அதிமுக கூறியப் புகாருக்கு ஆதாரம் தரவில்லை.
அதிக வாகனங்களைப் பயன்படுத்தியதற்காக பெரியகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆரூணுக்குத்தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க முடியாது. தேர்தல் விதிகளில் அப்படி ஏதும் கூறப்படவில்லை.
மகளிர் சுய உதவிக் குழுக்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாக வந்த புகார் நிரூபிக்கப்படவில்லை.
புதுவையில் கட்சி விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்ட இடத்தில் இரவோடு இரவாக மீண்டும் பலகைகள் வைத்ததுதொடர்பாக, அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினர்.
-
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications