பாஜகவை திருத்த முடியாததால் திரும்பிவிட்டோம்: கருணாநிதி
மதுரை:
பா.ஜ.கவை திருத்தப் போய் திருத்த முடியாததால் திரும்பி விட்டோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
மது-ரை- தமுக்கம் மைதானத்தில் ஜன-நா-யக முற்போக்கு கூட்டணி தேர்தல் பிர-சார கூட்டம் நடந்தது. கூட்டத்தில்கரு-ணா-நிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலர் ஹர்கிஷண்சிங் சுர்ஜித், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொதுச் செயலர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர்வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கருணாநிதி பேசியதாவது:
பா.ஜ.கவை திருத்தப் போய் திருத்த முடி-யா-ததால் கூட்டணியிலிருந்து திரும்பி-விட்டோம். இப்போது எங்கள்அணி-யில் யார் எந்த முடிவு எடுத்தா-லும் கலந்து பேசி எடுக்கி-றோம். நாங்கள் எடுக்கும் முடிவு இந்தி-யா-வின்எதிர்கா-லத்தை நிர்ண-யிப்ப-தாக இருக்கும்.
இந்த அணி மத்திய ஆட்சிக்கு மட்டு-மின்றி, மாநில ஆட்சிக்கும் எதி-ரான அணி-யா-கும். இந்த ஆட்சியில்விவ-சா-யி-கள், ஆசி-ரி-யர்கள், தொழி-லாளர்கள் ஒவ்வொரு கால-கட்டத்தில் பழி-வாங்கப்பட்ட-னர். ஒரே நாளில் 2லட்சம் அரசு ஊழி-யர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டது வேறு எங்கும் நடந்த-துண்டா?
இப்பி-ரச்னையை தீர்க்க பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வா-னி-யி-டம் காவடி எடுத்தோம், நடக்க-வில்லை.பின்பு உச்ச நீதிமன்றத்தை நாடி உரிய நீதியைக் கேட்டுப் பெற்றோம். அவர்க-ளுக்கு ஜன-நா-யக ரீதியில் தண்டனைஅளிக்க வேண்டும். அந்த தண்டனை தரும் நாள்தான் மே 10.
முதல்வர் ஜெய-ல-லிதா எங்கள் கூட்டத்தை கய-வர் கூட்டம் என்கி-றார். இது கய-வர் கூட்டமா? சுர்ஜித் உள்ளிட்டகம்யூனிஸ்ட் தலை-வர்கள் உடல் முழு-வ-தும் தியா-கத் தழும்பு உள்ளது. தேர்தல் நிலை-மையை பார்த்து-விட்டுதாறு-மா-றாக உளறும் நிலை தமி-ழ-கத்தி-லும், மத்தி-யி-லும் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் கூட்ட-ணி-யில் காலை-யில் ராஜி-னாமா செய்தவரை மாலை-யில் சேர்த்து, பிறகு வேட்பாள-ராகநிறுத்து-கிறார்கள். எந்த கட்சி-யில் இருந்தும் பிள்ளை பிடிக்கும் வேலையை பா.ஜ.க. தலைவர் வெங்கை-யா-நா-யுடுசெய்கி-றார்.
சினிமா நட்சத்தி-ரங்களை வைத்து வெற்றி பெற முடி-யும் என அவர்கள் நினைக்கின்ற-னர். வானத்து சந்தி-ரனேவந்தா-லும் எங்களது வெற்றியை தடுக்க முடி-யாது என்று அவர் பேசி-னார்.
ஹர்கிஷண்சிங் சுர்ஜித் பேசியதாவது:
நம் நாட்டு அரசு மதச்சார்பற்ற அரசாக இருக்கும்படிதான் அரசியல் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால்,பா.ஜ.கவுக்கு மதச்சார்பின்மையில் நம்பிக்கை இல்லை. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் ஒற்றுமைபாதிக்கப்படும்.
இதைப் புரிந்துகொண்டுதான் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து கருணாநிதி விலகினார். தற்போது தங்கள் கூட்டணிக்குவருமாறு கட்சிகளை வாஜ்பாய் அழைக்கிறார்.
எங்கள் கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது என பா.ஜ.க. கூறுகிறது. ஆனால் எங்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை.மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று பேசினார்.
நல்லகண்ணு பேசுகையில், தோல்வி உறுதி என்று தெரிந்தவுடன் ஜெயலலிதா ஏதேதோ பேசுகிறார். நீதிமன்றத்தீர்ப்புகளை அவர் மதிப்பதில்லை. அவரது பிடிவாதத்துக்கு மக்கள்தான் மருந்து கொடுக்க வேண்டும் என்றார்.
வரதராஜன் பேசுகையில், தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் பெரும் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.எனவே அனைத்துத் தொகுதிகளிலும் வெல்வோம். தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு கிடைக்கும்வெற்றி மத்தியில் ஏற்படும் ஆட்சி மாற்றத்துக்கு உந்து சக்தியாக அமையும் என்றார்.












Click it and Unblock the Notifications