சும்மா பார்க்கத்தான் வந்தோம்!
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:
ஜெயலலிதா பிரசாரத்திற்குச் செல்லும் இடங்களில் அவரைக் காண்பதற்காக மட்டுமே பொதுமக்கள் பெருமளவில் கூடுகிறார்கள்என்பதால் அதிமுகவினர் கவலை அடைந்துள்ளனர்.
ஆரம்பத்தில் டல்லடித்த ஜெயலலிதாவின் பொதுக் கூட்டங்களுக்கு இப்போது கூட்டம் நன்றாகவே வருகிறது. இருந்தாலும்அவர்களில் முக்கால்வாசிப் பேர் ஜெயலலிதாவைப் பார்த்து ரொம்ப நாட்களாகிறதே, இப்போது எப்படி உள்ளார் என்பதைக்காண ஆவலுடன் வந்தவர்கள். ஆனால் அதிமுகவுக்கு ஓட்டளிப்பது குறித்து அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால் கூட்டம் அதிகமாக வந்தாலும் அவர்களில் உண்மையான அதிமுகவினர் இல்லை என்பதால் அதிமுகவினர் கவலைஅடைந்துள்ளனர். இதனால் கூட்டத்திற்கு வருபவர்களிடம் அம்மாவை மட்டும் பார்க்காதீங்க, இரட்டை இலையையும்மறக்காமல் வோட்டு போடுங்க என்று அன்பு வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications