தந்தை இறந்த சோகத்தில் மகள் தற்கொலை; கூடவே தோழியும் சாவு

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் தந்தை இறந்த சோகத்தில் அவரது மகள் தற்கொலை செய்து கொண்டார். அவருடன் அவரதுதோழியும் தற்கொலை செய்து கொண்டார்.

மயிலாடுதுறை அருகே உள்ளது செருதூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் ஜோதி (வயது 15).இவரது நெருங்கிய தோழி வசந்தா (15). அருள் ஜோதியின் தந்தை சமீபத்தில் இறந்தார். இதனால் அருள் ஜோதிமனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

தனது தோழி வசந்தாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவருடன் தனது துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில், சோகத்தை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார் அருள்ஜோதி. இதை தனதுதோழி வசந்தாவிடம் தெரிவித்தார்.

நீ மட்டும் இறந்தால் பின்னர் நான் எப்படி அந்தப் பிரிவை தாங்குவேன். இருவரும் சேர்ந்தே தற்கொலை செய்துகொள்வோம் என்று வசந்தா கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் வசந்தாவின் வீட்டில் தற்கொலை செய்துகொண்டனர்.

9 வயது சிறுவன் தற்கொலை:

இதேபோல், மதுரை அருகே பணம் கேட்டு தாய் தர மறுத்ததால் மனம் உடைந்த 9 வயது சிறுவன் மண்ணெண்ணை ஊற்றிதீவைத்துத் தற்கொலை செய்து கொண்டான்.

மதுரை அருகே காரியாபட்டி கிராமத்திற்கு அருகே உள்ளது கரிசல்குளம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மணக்காளை. இவரதுமகன் மலையாண்டி. 9 வயது சிறுவனான மலையாண்டி, புதன்கிழமை தனது தாயிடம் பணம் கேட்டுள்ளான். அதற்கு அவர் தரமறுத்துத் திட்டியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மலையாண்டி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டான். பதறிப் போனஅக்கம் பக்கத்தினர் மலையாண்டியை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் சனிக்கிழமை மலையாண்டி இறந்து போனான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+