விருத்தாசலத்தில் தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தப்பின
Subscribe to Oneindia Tamil
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
நேற்று நள்ளிரவு 3 மணிக்கு இந்த விரிசலை ரயில்வே ஊழியர் கண்டுபிடித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தந்தார். இதையடுத்து அந்த வழியாக வர இருந்த சென்னை- திருச்சி மலைக்கோட்டை ரயில் விருத்தாசலம் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.
பின்னர் தண்டவாளத்தை சீர் செய்யும் பணி தொடங்கியது. இரண்டு மணி நேரத்துக்குப் பின்னரே விரிசல் சரி செய்யப்படு மீண்டும் ரயில் போக்குவரத்துத் தொடங்கியது.
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் தவிர முத்து நகர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி சிறப்பு ரயில் ஆகியவையும் வழியில் நிறுத்தப்பட்டு தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.












Click it and Unblock the Notifications