இன்று நள்ளிரவில் சந்திர கிரகணம்
சென்னை:
இன்று நள்ளிரவில் சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இந்தகிரகணத்தைக் காண முடியும்.
சென்னையில் சந்திர கிரகணத்தைப் பொதுமக்கள் காண்பதற்கு அறிவியல் தொழில் நுட்ப மையம் ஏற்பாடுசெய்துள்ளது.
இந்தக் கிரகணம் நள்ளிரவு 1:32க்கு ஆரம்பிக்கிறது. இந்தியா, ஆப்ரிக்காவின் பல பகுதிகள், மத்திய கிழக்குஆசியா, கிழக்கு ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் முழு அளவிலும், தென் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா,ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் குறைவான அளவிலும் இந்த சந்திர கிரகணத்தைக் காணலாம். வடஅமெரிக்காவில் இந்த சந்திர கிரகணத்தைக் காண முடியாது.
சந்திர கிரகணத்தைப் பொதுமக்கள் காண்பதற்கு சென்னை அறிவியல் தொழில் நுட்ப மையம் ஏற்பாடுசெய்துள்ளது. இது குறித்து மையத்தின் தலைவர் எஸ். ரவி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
சென்னை அடையாறு இந்திரா நகரிலுள்ள 2-வது அவென்யூவில், இந்திரா நகர் குடிநீர் டேங்க் அருகில்அமைந்துள்ள இளைஞர் விடுதியில் சந்திர கிரகணத்தைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று இரவு 11.30 மணிக்குத் தொடங்கி நாளை அதிகாலை 3.30 வரை கிரகணத்தைக் காணலாம். இங்குவருவோர் வானியல் துறை வல்லுநர்களுடன் கலந்து உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்குபெற விரும்புவோர் மைலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகில் ஆஞ்சேனயர் கோயில் வளாகத்தில் உள்ள மேக்ரோமார்க்கெட்டிங் நிறுவனத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு வருட காலத்துக்குள் ஏற்படும் மூன்றாவது சந்திர கிரகணம் இது. கடந்த ஆண்டு மே 15, 16 மற்றும் நவம்பர் 8ம்தேதிகளிலும் சந்திர கிரகணம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications