விழுப்புரம் அருகே வேன்-அரசு பஸ் மோதல்: 3 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே வேனும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 3 பேர் சம்பவஇடத்திலேயே பலியாயினர். 11 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையைச் சேர்ந்த சிலர் வேன் மூலம் ஏற்காடு சென்று கொண்டிருந்தனர். இன்று காலை விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சிஅருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சேலத்திலிருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இவர்களில் வேன் ஓட்டுனரும் அடங்குவார். 11பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் புதுவை மற்றும் உளுந்தூர்ப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications