சு.சுவும் ஏ.சி.எஸ்சும்
சென்னை:
ஜனதாக் கட்சியும், புதிய நீதிக் கட்சியும் சேர்ந்து 5 தொகுதிகளில் வெற்றி பெறும். மத்தியில் புதிய ஆட்சி அமைவதில் இருகட்சிகளும் முக்கியப் பங்கு வகிக்கும் என்று ஜனதாக் கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறுகிறார்.
அவ்வப்போது ஏதாவது அதிர்ச்சி குண்டு போடுவது சுவாமியின் வழக்கம். அவரோடு சேர்ந்து விட்டதாலோ என்னவோ புதியநீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகமும் இப்போது சுவாமி மாதிரியே பேச ஆரம்பித்துள்ளார்.
20 தொகுதிகளில் ஜெயிப்போம், அடுத்து எங்கள் ஆட்சிதான் என்று கொஞ்சம் கூட சிரிக்காமல் ஜோக் அடித்து வருகிறார்ஏ.சி.எஸ்.
இந் நிலையில், சு.சுவாமி கூறியதாவது:
எப்படியும் தொங்கு பாராளுமன்றம்தான் வரப் போகிறது. அப்போது சிறு கட்சிகளின் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்கமுடியாது.
ஜனதாக் கட்சியும், புதிய நீதிக் கட்சியும் சேர்ந்து தமிழகத்தில் 5 தொகுதிகளை நிச்சயம் பிடிப்போம். இதனால், அடுத்து மத்தியில்ஆட்சி அமைக்க எங்களது தயவு நிச்சயம் தேவைப்படும். ஆனால் நாங்கள் வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு கொடுப்போம்.(ஆட்சியில் பங்கேற்க மாட்டாராம்)
இல்லாவிட்டால் 3வது அணி அமைத்து புதிய ஆட்சி அமைய முயற்சிப்போம் என்றார்.
ஆனாலும் சுவாமிக்கு கிண்டல் ரொம்ப ஜாஸ்தி..












Click it and Unblock the Notifications