தன்னிச்சையாக செயல்பட முடியாத வாஜ்பாய்: கருணாநிதி
சென்னை:
தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலையில் பிரதமர் வாஜ்பாய் இருக்கிறார் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலையில் வாஜ்பாய் இருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள்இருந்தபோது, எங்களுடைய கோரிக்கைகள் குறித்து கேட்கலாம் என்று நினைத்தாலும் துணைப் பிரதமர் அத்வானிபோன்றவர்கள் அதைத் தடுத்து விடுகிறார்கள்.
பொடா சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்று பலமுறை கேட்டுக்கொண்டோம். ஆனால் அதைத் திரும்பப்பெறவில்லை. நீண்ட வலியுறுத்தலுக்குப் பிறகு ஆய்வுக்குழு ஒன்றை அமைத்தார்கள். தமிழகத்தில் அந்தஆய்வுக்குழுவின் பரிந்துரையை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அதை எதிர்த்து நீதிமன்றம்சென்றிருக்கிறார்கள்.
இப்போது முதல்வர் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்திருக்கும் வாஜ்பாய், பொடா மறுஆய்வுக் குழுவின்பரிந்துரையை ஏற்றுக் கொள்ளும்படி ஜெயலலிதாவிடம் கூற முடியுமா? அப்படியே அவர் கூற விரும்பினாலும்அத்வானி போன்றவர்கள் விட்டுவிடுவார்களா?
அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டியே தீருவோம் என்றார்கள். கூட்டணியின் தேசிய செயல் திட்டத்தில்கூறப்பட்ட உறுதி மொழிக்கு அது எதிரானது என்பதால் அதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்கள்கோரிக்கைகளை அவர்கள் செவிமடுக்கவில்லை. எனவே தான் கூட்டணியிலிருந்து வெளியேறினோம்.
தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திதான் பிரதமர் என்று பேசியது என்னுடைய கருத்து.
13ம் தேதி முடிவுகள் வந்த பிறகு கூட்டணி கட்சித் தலைவர்கள் அமர்ந்து பேசி ஆட்சி அமைப்பது குறித்துமுடிவெடுப்போம். இப்போதிருக்கின்ற சூழலில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மாதிரி சிலர் அணி மாறலாம் என்றுகூறினார்.
முன்னதாக நேற்று சென்னை திருவான்மியூர் பகுதியில் திமுக பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில் தென்சென்னை வேட்பாளர் டி.ஆர்.பாலு, மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்துகருணாநிதி பேசினார்.
கருணாநிதி பேசுகையில், சென்னைக்கு வந்துள்ள வாஜ்பாய், ஜெயின் கமிஷன் அறிக்கையால் குற்றம் சாட்டப்பட்டதிமுகவுடன் காங்கிரஸ் எப்படி கூட்டணி வைத்துள்ளது என்று கேட்டுள்ளார். இது எனக்கு ஆச்சர்யத்தைஏற்படுத்தியது.
ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கையில், திமுக மீது எந்தக் குற்றமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. சிபிஐமுன்னாள் இயக்குநர் விஜய் கரணும் தான் எழுதிய புத்தகத்தில் திமுக மீதான புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்றுகூறியுள்ளார்.
அப்படி இருக்கையில் யாரை திருப்திப்படுத்துவதற்காக வாஜ்பாய் இப்படிப் பேசினார் என்று தெரியவில்லை.இந்தப் பேச்சு தேவையில்லாதது, கண்டனத்துக்குரியது.
மத்தியில் மதச்சார்பற்ற கூட்டணியின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திமுக, காங்கிரஸ், மதிமுக,பா.ம.க., கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளோம்.
இதை சுயநல கூட்டணி என்பதா? இதில் என்ன சுயநலம் உள்ளது? எங்களிடம் எந்த மறைமுகத் திட்டமும் இல்லை.
ராமர் கோவில் கட்ட மாட்டோம் என்று தனது கூட்டணிக் கட்சிகளிடம் பா.ஜ.க. உறுதிமொழி கூற முடியுமா? ராமர்கோவில் கட்டுவதை அவர்கள் உறுதிமொழியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன் காரணமாகத்தான் திமுகவும்தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது என்றார் கருணாநிதி.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications