பசுவதைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி:
பசுவதையை தடை செய்ய உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தியா முழுவதும் பசுவதையை தடை செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சத்யபிரகாஷ் என்பவர் பொதுநலன் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திரபாபு, நீதிபதி மாத்தூர், நீதிபதி கபாடியா ஆகியோர் முன்புவிசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் ரமேஷ்வர்பிரசாத் வாதாடுகையில்,
பசுவதை இந்துக்களுடைய மத உணர்வை புண்படுத்துவதாக உள்ளது. ஏற்கனவே பல மாநிலங்களில் பசுவதைதடை செய்யும் சட்டம் அமலில் உள்ளது. இதை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறினார்.
இதன் பின்னர், பசுவதையை தடை செய்ய உத்தரவிட முடியாது என்று கூறி நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடிசெய்தனர்.
ஜோதிட பாடத்துக்கு அனுமதி:
இந் நிலையில் வேறொரு வழக்கில், பல்கலைக்கழகத்தில் ஜோதிடத்தை பாடமாக வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
கடந்த 2001ம் ஆண்டில் பல்கலைக் கழகங்களின் மானியக்குழு பரிந்துரையின் பேரில் "ஜோதிர்விஞ்ஞான்" என்றதலைப்பில் ஜோதிடம் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனை எதிர்த்து விஞ்ஞானி பார்கவா என்பவர் ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தவழக்கை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கவில்லை. இதனையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திரபாபு, நீதிபதி மாத்தூர் ஆகியோர்,பல்கலைக்கழக மானியக்குழு எடுத்த முடிவில் தவறில்லை. பல்கலைக்கழகங்களில் ஜோதிடத்தை பாடமாகவைக்கலாம்" என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications