என்னை நம்புங்கள் வாஜ்பாயை நம்புங்கள்: ஜெ
சென்னை:
என்னை நம்பினால் சென்னை நகரின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
மத்திய சென்னை அதிமுக வேட்பாளர் பாலகங்காவை ஆதரித்து சென்னையில் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது:
தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு செவி சாய்க்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும். அதற்கு வாஜ்பாய் பிரதமராகவேண்டும். சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறேன்.
அதில் புதிய வீராணம் திட்டமும் ஒன்று. இந்த திட்டம் சாத்தியம் நிறைவேற சாத்தியமில்லை என்று திமுக தலைவர்கருணாநிதி கூறுகிறார். அவர் கூறுவது உண்மை என்றால் உலக வங்கி ரூ. 1,638 கோடி கடன் வழங்கியிருக்குமா?
சென்னை மாநகர குடிநீர் பிரச்சினை தீர்க்க திமுக எதுவும் செய்யவில்லை. அவர்கள் எதையும் செய்யமாட்டார்கள்.அதை செய்ய நான் முன் வந்தால் அவர்களால் பொருத்துக் கொள்ள முடியாது.
எதை செய்ய முடியுமோ அதைத் தான் நான் சொல்வேன். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண உதவுவதாக வாஜ்பாய்கூறியிருக்கிறார். என்னை நம்புங்கள்; வாஜ்பாயை நம்புங்கள்.
மீண்டும் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்தால் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து சென்னை மாநகரகுடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்போம் என்று பேசினார்.
இன்று வெங்கைய்யா..நாளை அத்வானி
அகில இந்திய பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு இன்று வடசென்னை தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.
இத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சுகுமாரன் நம்பியாரை ஆதரித்து வில்லிவாக்கம், திருவொற்றியூர், ஆர்.கே. நகர் பகுதிகளில்அவர் பிரசாரம் செய்கிறார்.
அதே போல அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல. கணேசன் இன்று வட சென்னையிலும் நாளை சிதம்பரம், புதுவைத் தொகுதிகளிலும்பிரச்சாரம் செய்கிறார்.
அத்வானி வருகை:
இந் நிலையில் துணைப் பிரதமர் அத்வானி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை தமிழகம் வருகிறார். விருத்தாசலத்தில் நடைபெறும்தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
முதலில் எல்.கே. அத்வானி இன்று ஊட்டியில் பிரசாரம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்தமழையின் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ஊட்டி பிரச்சாரம்ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இதனால் நாளை பகல் 12 மணிக்கு அவர் விருத்தாசலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மட்டும் கலந்து கொண்டு பேசும்அத்வானி, பின்னர் புதுவைக்குச் சென்று பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்துக்கு பிரசாரம் செய்கிறார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications