நடிகர் பாண்டியன் பிரச்சாரத்தில் திமுக- அதிமுகவினர் மோதல்
கரூர்:
நடிகர் பாண்டியனின் பிரசாரத்தின்போது தகராறு செய்ததாக திமுகவினர் 16 பேர் மீது கரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் அதிமுக வேட்பாளர் ராஜா என். பழனிச்சாமியை ஆதரித்து நடிகர் பாண்டியன் திறந்த ஜீப்பில் பிரசாரம்செய்தார். இவரும் எஸ்.எஸ.சந்திரனைப் போலவே திமுகவில் இருந்து அதிமுகவுக்குப் போனவர். இவரும்அவரைப் போலவே கருணாநிதியை படு கேவலமாக விமர்சித்து வருகிறார்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் எழுந்து வருகிறது. பல இடங்களில்பாண்டியனை திமுகவினர் தாக்க முயன்று, போலீஸ் பாதுகாப்புடன் அவர் தப்பினார்.
இந் நிலையில் கரூர் சின்ன ஆண்டான் கோயில், பசுபதிபாளையம் பகுதிகளில் பிரசாரம் செய்தபோது திமுகதலைவர் கருணாநிதி உள்ளிட்ட ஜனநாயக முற்போக்குக் கூட்டணித் தலைவர்களை மகா மட்டமாக விமர்சித்தார்பாண்டியன்.
இதையடுத்து டேய் என அவரை ஒருமையில் அழைத்த திமுகவினர், ஒழுங்கா பேசுடா.. இல்லாட்டா எனமிரட்டினர். சில திமுகவினர் சைக்கிள்களைத் தூக்கி பாண்டியன் மீது வீச முயன்றனர். இதனால் அதிமுகவினருக்கும்,திமுகவினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
ஒருவரையொருவர் தரக்குறைவாகப் பேசிக் கொண்டதோடு தாக்கிக் கொள்ளவும் முயன்றனர். நிலைமை கட்டுமீறிப்போனதையடுத்து, சினிமாவில் வருவது போல கடைசி சீனில் வந்து எட்டிப் பார்த்த போலீசார், இரு தரப்பினரையும்விலக்கிவிட்டனர்.
இந் நிலையில் அப்பகுதியில் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் அவ்வழியே சென்ற ஒரு காரின் கண்ணாடிஉடைந்தது.
இந்தச் சம்பவம் குறித்து அதிமுக நகரச் செயலாளர் பாஸ்கரன் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதில் திமுகவினர்தான் கல் வீசியதாகக் கூறப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் திமுக நகரச் செயலாளர் கனகராஜ், மாவட்டச் செயலாளர் வாசுகியின் கணவர்முருகேசன், தாந்தோணி ஒன்றியச் செயலர் ரகுநாதன் உள்ளிட்ட 16 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஜாமீன்
இதற்கிடையே திமுகவினரைத் தாக்கிய வழக்கில் நடிகரும் அதிமுக எம்.பியுமான எஸ்.எஸ்.சந்திரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம்முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த 1ம் தேதி சேலம் அருகே கன்னங்குறிச்சியில் எஸ்.எஸ்.சந்திரன் பிரசாரம் செய்தார். அப்போது திமுக தலைவர் கருணாநிதியைத்தரக்குறைவாக பேசியதற்கு, அப்பகுதி திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களைப் பார்த்து போங்கடா.. வாங்கடா எனஎஸ்.எஸ். சந்திரன் மைக்கில் ஒருமையில் திட்டவே, மேடையை நோக்கி திமுகவினர் சைக்கிள்களை தூக்கி வீசினர்.
இதனையடுத்து திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது எஸ்.எஸ். சந்திரனின் காரில் இருந்தஅரிவாள்கள், உருட்டுக் கட்டைகள் களமிறக்கப்பட்டன. திமுகவினர் பலருக்கும் அடி, உதை, வெட்டு விழுந்தது.
இது தொடர்பாக இரு தரப்பிலும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
தேர்தல் கமிஷனின் பார்வைக்கும் திமுக இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றது. இதையடுத்து எஸ்.எஸ். சந்திரன் மீது போலீசார்வழக்குப் பதிவு செய்து விடுவித்தனர். மேடையில் பேசும்போது எஸ்.எஸ்.சந்திரன் குடிபோதையில் இருந்ததாக போலீசாரேகூறியுள்ளனர்.
இந் நிலையில் திமுகவினர் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் தன்னை மீண்டும் கைது செய்தால் (தேர்தல் கமிஷன் நெருக்கும்பட்சத்தில்) முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று எஸ்.எஸ்.சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம் எஸ்.எஸ்.சந்திரனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கினார். எஸ்.எஸ். சந்திரன்வேலூரில் தங்கியிருக்க வேண்டும் என்றும், அங்குள்ள முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.












Click it and Unblock the Notifications