திமுக விஷயத்தில் காங்கிரஸ் நாடகம்: பா.ஜ.க.
சென்னை:
ராஜிவ் காந்தி கொலையில் ஜெயின் கமிஷன் அறிக்கையை வைத்து திமுக மீது குற்றம் சாட்டிநாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் இப்போது அக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதற்கானகாரணத்தை மக்களுக்கு விளக்கியாக வேண்டும் என பா.ஜ.க. மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுவும், துணைப் பிரதமர் அத்வானியும்காங்கிரஸ் மீது கடும் தாக்குதல் தொடுத்துள்ளனர்.
இன்று காலை சென்னை வந்த பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு நிருபர்களிடம் பேசுகையில்,
ராஜிவ் கொலையை காரணமாகக் காட்டி திமுக அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்என்று குஜ்ரால் அரசை காங்கிரஸ் நிர்பந்தித்தது. அதற்கு பிரதமராக இருந்த குஜ்ரால் மறுத்ததால்அவருக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற்றது.
அதே போல துணைப் பிரதமர் அத்வானியை சந்தித்த பிரனாப் முகர்ஜி, கபில் சிபல் ஆகிய காங்கிரஸ்தலைவர்கள் திமுக மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தனர்.
இவை நடந்தது எல்லாம் ஜெயின் கமிஷன் தனது இறுதி அறிக்கையை தந்த பிறகு தான்.
ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கையில் திமுக மீது எந்தக் குற்றமும் சாட்டப்படவில்லை என்றுஇப்போது கூறும் காங்கிரஸ், அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கக் கோரியது.
இதற்கு காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், காங்கிரஸ் வழக்கமாகவேமுன்னுக்குப் பின் முரணாக செயல்படும் கட்சி என்ற எங்களின் குற்றச்சாட்டை அக் கட்சி முழுமையாகஏற்றுக் கொள்கிறது என்று தான் அர்த்தம்.
நீதிபதி ஜெயின் தனது அறிக்கையைத் தந்த 4 மாதங்களுக்குப் பின் 1999ம் ஆண்டு ஆகஸ்ட்மாதத்தில் ராஜ்ய சபாவில் பேசிய காங்கிரஸ் எம்.பியான கபில் சிபல், ராஜிவ் கொலையில் திமுகவைஜெயின் விடுவிக்கவில்லை, நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறார் என்று கூறினார்.
ஆனால், இப்போது அதே காங்கிரஸ், திமுகவை ஜெயின் விடுவித்துவிட்டார் என மாற்றிப் பேசிமக்களை ஏமாற்றப் பார்க்கிறது.
நாங்கள் எப்போதுமே திமுகவுக்கும் ராஜிவ் கொலைக்கும் முடிச்சு போட்டதில்லை. காங்கிரஸ்சொன்னதை நினைவுபடுத்துகிறோம், அவ்வளவுதான்.
தொங்கு நாடாளுமன்றம் உருவானாலும் கூட தேர்தலுக்குப் பின் எங்கள் கூட்டணியில் எந்தமாற்றமும் இருக்காது, தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணிக் கட்சிகளை இழுக்கும் திட்டம் ஏதும்இல்லை என்றார் வெங்கையா நாயுடு.
அத்வானி பேட்டி:
இன்று காலை திருவனந்தபுரம் வந்த துணைப் பிரதமர் அத்வானி நிருபர்களிடம் பேசுகையில்,
1998ம் ஆண்டும், 2001 முதல் 2002ம் ஆண்டு வரையும் என்னை காங்கிரஸ் தலைவர்கள் பலமுறைசந்தித்து திமுகவுக்கு எதிராக மனு கொடுத்தனர். ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில்திமுக மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
எங்கள் கூட்டணியில் இருப்பதால்தான் திமுக மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறோம் என்றும்காங்கிரஸ் தலைவர்கள் புகார் கூறினர்.
இதனால் தான் ராஜிவ் கொலை விசாரணையில் மத்திய அரசு ஏதாவது தவறு செய்ததா என்பதுகுறித்து ஆராய ஒரு குழுவை அமைத்தோம். அந்தக் குழுவின் விசாரணை இப்போதும் நடந்துகொண்டுள்ளது என்றார் அத்வானி.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்.. டீசல் விலை உயர்வு வேலையை காட்ட துவங்கியது! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications