காங்- திமுக கூட்டணியை பிரிக்க முடியாது: கருணாநிதி உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Sonia Gandhi&Karunanidhiகாங்கிரஸ், திமுகவுக்கிடையே ஏற்பட்டுள்ள கூட்டணியைப் பிரிக்க சில சக்திகள் முயல்கின்றன. ஆனால், அந்தமுயற்சியில் அவர்களுக்கு கிடைக்கப் போவது தோல்விதான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமானநிலையத்தில் ஏராளமான காங்கிரஸ் திமுக தலைவர்கள் தொண்டர்கள் வரவேற்றனர்.

அங்கிருந்து நேராக திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சோனியா சென்றார். அவரைதிமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வரவேற்றார்.

பின்னர் அறிவாலய வளாகத்தில் கருணாநிதியை சோனியா சந்தித்தார். சோனியாவுக்கு கருணாநிதி பொன்னாடைபோர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து சொன்னார். பின்னர் இருவரும் ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.இச் சந்திப்பின்போது மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், திமுக துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலின் ஆகியோரும் உடனிருந்தனர்.

பின்னர் சோனியாவும், கருணாநிதியும் ஒரே காரில் பொதுக் கூட்டம் நடக்கும் தீவுத் திடலுக்கு வந்தனர். அங்குநடந்த மிகப் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் இருவரும் பேசினர்.

கருணாநிதி பேசுகையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்டமதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பதை சிலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை, ஜீரணிக்க முடியவில்லை.

இந்தக் கூட்டணி பிரியாதா, பிரிக்க முடியாதா என்று அவர்கள் நப்பாசை கொண்டுள்ளனர். ஆனால் இப்போதுஉறுதியாகச் சொல்கிறேன். இந்தக் கூட்டணி தொடரும், தொடர்ந்து வலுவுடன் திகழும்.

தமிழகத்திலும், புதுவையிலும் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அந்தசந்தோஷச் செய்தி சோனியாவின் காதுகளுக்கு வந்து சேரும். அதில் சந்தேகம் வேண்டாம்.

தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சாட்டி, விமர்சித்துப் பேசக் கூடாது என்று வாஜ்பாய் கூறுகிறார். ஆனால்அவரை முன் வைத்துக் கொண்டே இதை மைதானத்தில் ஜெயலலிதா, சோனியா காந்தியையும், என்னையும்கடுமையாக விமர்சித்தார். அதை வாஜ்பாய் ரசிக்கிறார்.

அதேபோல, மாநிலப் பிரச்சினைகளை பேச வேண்டாம் என்று கூறுகிறார் வாஜ்பாய். மாநிலப் பிரச்சினைகளைபேசாமல் வேறு எதைப் பேசுவது? மாநிலப் பிரச்சினைகளை பேசினால், ஜெயலலிதாவின் குற்றங்கள், குறைகள்வெளிப்பட்டு, பா.ஜ.க-அதிமுகவுக்கு ஓட்டு கிடைக்காமல் போகும் என்ற பயத்தில்தான் வாஜ்பாய் இவ்வாறுகூறுகிறார்.

சென்னை அருகே திமுக பொதுக் கூட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் 12 வயது சிறுவன் இறந்து விட்டான். இதற்காகதிமுக பிரமுகரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால் லக்னோவில் பிரதமர் வாஜ்பாயின் தேர்தல்பொறுப்பாளர் லால்ஜி தாண்டன் ஏற்பாடு செய்த இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியின்போது 20க்கும் மேற்பட்டஅப்பாவிப் பெண்கள் கொல்லப்பட்டனர்.

லக்னோ சம்பவத்திற்காக யாரையும் கைது செய்யவில்லை அந்த மாநில போலீஸ். இது ஜெயலலிதா அரசின்அடக்குமுறைக்கு நல்ல உதாரணம் என்றார் கருணாநிதி.

இரு நாட்களுக்கு முன் இதே இடத்தில் வாஜ்பாய்- ஜெயலலிதா கலந்து கொண்ட கூட்டத்திற்குக் கூடிய கூட்டத்தைப்போல 4 மடங்கு கூட்டம் சோனியா- கருணாநிதிக்குக் கூடியிருந்தது. தீவுத் திடலையும் தாண்டி, கடற்கரைசாலையிலும் மக்கள் தலைகளாகவே காணப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+