மேலும் 2 போலீஸ் அதிகாரிகளை இடம் மாற்றிய தேர்தல் ஆணையம்
சென்னை:
சென்னை மாநகர காவல்துறையைச் சேர்ந்த 2 உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடம் மாற்றியுள்ளது.ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதால் இவர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது. வேறு எந்தமாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழக அதிகாரிகள் மீது அதிக அளவில் விதி மீறல் புகார்கள் வருவதேஇதற்குக் காரணம்.
இந் நிலையில், சென்னை மாநகர துணை ஆணையராக இருந்து வந்த சண்முக ராஜேஸ்வரன், உதவி ஆணையர்முருகேசன் ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சண்முக ராஜேஸ்வரனுக்குப் பதில் கருணாசாகர் என்பவர் அவரது பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னைநகரில் ஜெயலலிதா பிரசாரக் கூட்டங்களில் அதிக அளவில் விதி மீறல்கள் நடந்தும், அதைக் கண்டுகொள்ளாததால் இரு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மதுரை காவல்துறை ஆணையர் விஜயக்குமார், சென்னை ஆட்சித் தலைவர் கண்ணுச்சாமி, திருவள்ளூர்ஆட்சித் தலைவர் சந்திரமோகன் உள்ளிட்டோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்.. டீசல் விலை உயர்வு வேலையை காட்ட துவங்கியது! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!










Click it and Unblock the Notifications