ஓய்ந்தன மைக்செட்டுகள்.. வீடு வீடாய் பிரச்சாரம்!
சென்னை:
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தாலும், வீடு வீடாகச்சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாலை சென்னை கோட்டூர்புரத்தில் முதல்வர் ஜெயலலிதாவும், சிந்தாதிரிப்பேட்டையில் திமுக தலைவர்கருணாநிதியும் தங்களது இறுதிப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
கடும் வெயிலில் 50 நாட்களுக்கு முன் தொடங்கியது தலைவர்களின் சூறாவளிப் பிரச்சாரம். வெயில் கொடுமைகாரணமாக மாலை 3 மணிக்கு மேல் தான் தலைவர்கள் வெளியே எட்டிப் பார்த்தனர்.
இரண்டாம் மட்டத் தலைவர்களும், தொண்டர்களும் தான் வெயிலில் வாடினர். தேர்தல் நெருங்கி வந்த நிலையில்வானம் பொழிந்தது, இதனால் வெப்பம் அடங்கியது. விளைவு.. காலை 8 மணிக்கே பிரச்சாரத்தில் இறங்கிகலக்கினர் தலைவர்கள்.
ஆங்காங்கே கூட்டணி கலாட்டாக்கள், தொண்டர்களுக்கு கவனிப்பு இல்லை, வேட்பாளரிடம் பணமில்லை என்றுபஞ்சப்பாட்டுகளும் கேட்டன.
ஆனால், தினகரன் போட்டியிடும் பெரியகுளம் தொகுதியில் மட்டும் பணம் வெள்ளமாகப் பாய்ந்தது. பாயந்துகொண்டிருக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா தனது ஏசி வேனை விட்டு வெளியில் இறங்காமாலயே பிரச்சாரம் செய்தார். மக்களிடையேஅவர் பேசும்போதும் கூட வேனின் கண்ணாடிகள் ஏற்றப்பட்டே இருந்தன. குழந்தைகளுக்கு பெயர் வைக்கஅவரிடம் நீட்டப்பட்டபோது மட்டுமே கண்ணாடி இறங்கியது.
பொதுக் கூட்ட மேடைகளில் ஏற மட்டுமே அவர் வேனை விட்டு இறங்கினார். வேனில் ஜெயலலிதாவின் நிழலாய்உடன் இருந்தார் சசிகலா. அட்டைகளில் எழுதி வைக்கப்பட்ட விஷயங்களை அப்படியே படித்தார் ஜெயலலிதா.அட்டைகளை மாற்றி, மாற்றி எடுத்துத் தருவதும் நேரத்துக்கு காபி-பூஸ்ட் தருவதுமாக ஜெயலலிதாவை கவனித்துக்கொண்டார் சசிகலா.
ஆனால், ஓட்டை ரெக்கார்டு மாதிரி ஒரே பேச்சையே திரும்பத் திரும்பப் பேசி பேச்சைக் கேட்க வந்ததொண்டர்களையும், நிருபர்களையும் ஏமாற்றினார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக முன்னும் பின்னும் கமாண்டோக்களின் வாகனங்கள் வந்தன, ஜெயலலிதாவின்வேனிலும் சைடில் படிக்கட்டு அமைத்து, அதில் நின்றபடி 12 சபாரிகள் வந்தனர். இதனால் பிரச்சாரப் பயணமாகஇல்லாமல், ஜெயலலிதாவின் வேன் ஊர்வலம் ஏதோ வெளிநாட்டுத் தலைவரின் கார் அணிவகுப்பு மாதிரி தான்இருந்தது.
கருணாநிதியின் வேன் ஏசி செய்யப்பட்டிருந்தாலும் பெரும்பாலான நேரம் கண்ணாடி இறங்கியே இருந்தது.வேனுக்கு வெளியே நிறையவே தலை காட்டினார். ஆங்காங்கே வெளியில் இறங்கியும் பிரச்சாரம் செய்தார்.
வயோதிகம் காரணமாக மேடை ஏற, இறங்க சிரமப்பட்டாலும், அந்தந்தப் பகுதி வேட்பாளர்களின் தோளில்கையைப் போட்டபடி அவர்களின் உதவியால் மேடையேறினார் கருணாநிதி.
கருணாநிதியோ இடத்துக்கு தகுந்தார்போல விஷயங்களை எடுத்துவிட்டார். தண்ணீர் பிரச்சனையை முடிந்தஅளவுக்குப் பயன்படுத்தி ஓட்டு வேட்டையாடினார். பொடாவில் ஆரம்பித்து பா.ஜ.கவுக்கு அர்ச்சனை என திமுககூட்டணிக்கு திட்டவும், குறை சொல்லவும் நிறையவே விஷயங்கள் கிடைத்தன.
ஆட்சியில் இருப்பதால் அதிமுகவும் பா.ஜ.கவும் டிபன்சிவ் ஆட்டம் தான் ஆடினர்.
வாஜ்பாயின் பெயரைச் சொல்லியும் சோனியாவை தரக் குறைவாகத் திட்டியும் தான் ஓட்டு வேட்டையாடினார்ஜெயலலிதா. எனது சாதனைகள் இவை.. இவை.. என்று எதையும் சொல்ல முடியாத துர்பாக்கியமான நிலைஅவருக்கு.
பெரும்பாலான இடங்களில் ஜெயலலிதாவின் கூட்டங்களுக்கு, வேன், லாரி, டிராக்டர்களில், துட்டு செலவழித்து,பிரியாணி போட்டு, கூட்டம் கூட்டி வரவே அமைச்சர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் பெண்டுகழன்றுவிட்டது. இதைத் தான் பிரச்சாரம் என்றும் அதிமுகவினர் நினைப்பது தான் சோகம்.
பல பகுதிகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தொகுதிக்குள் செல்ல முடியாத நிலை. மக்கள் காலிக் குடங்களுடன்விரட்ட செம்மலை, பொன்னையன் உள்ளிட்டவர்கள் தப்பியோடிய சுவாரஸ்யங்கள நடந்தன.
சிறைக்குள் போய்விட்டு வந்த வைகோ, தனது வேலூர் சிறை அனுபவங்கள், கைதிகளுடன் வாலிபால்விளையாடியது, எறும்புகளிடம் பாடம் கற்றது, நெப்போலியனின் வரலாறு, திராவிடக் கலாச்சாரம் எனமேடைகளில் வார்த்தைகளால் சிலம்பாட்டம் போட்டார். அவரை வாய்ச்சவடால் வைகோ என விளித்தார்ஜெயலலிதா.
பிரச்சாரத்தில் கருணாநிதிக்கு அடுத்தபடியாக தமிழகம் முழுவதும் பெரும் கூட்டம் கூடியது வைகோவுக்குத் தான்.
அடுத்ததாக ராமதாஸ் புலியாய் பாய்ந்து, ரஜினியைத் திட்டி வம்பில் மாட்டி பூனையாகி அடங்கினார். ரஜினிகுறித்து கேள்வி கேட்டவர்களைத் திட்டும் அளவுக்கு ரஜினி காய்ச்சலில் டாக்டர் அவதிப்பட்டு வருகிறார்.தேர்தலுக்கு அப்புறம் வச்சுக்குவோம் என பா.ம.கவினரை அடக்கி வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.
இடையில் கேமராக்களுக்கு முன் மனம் திறந்த ரஜினி, நான் பா.ஜ.கவுக்கு நான் ஓட்டு போடப் போறேன்.. நீங்கஎன்னா வேணா செய்யலாம் என தெளிவாக பேசி எல்லோரையும் குழப்பினார். பா.ம.கவை எதிர்ப்பதாக சொன்னஅவர் திமுகவை எதிர்க்கிறாரா, அதிமுகவை ஆதரிக்கிறாரா என்று ஏதும் சொல்லவில்லை.
ரஜினியின் வீடு உள்ள போயஸ் கார்டன் அமைந்திருக்கும் மத்திய சென்னையில் போட்டியிடுவது அதிமுக,பா.ஜ.க. அல்ல. இதனால் பா.ஜ.கவுக்கு எப்படி ஓட்டு போடுவார் என்பது பாபாவுக்கே வெளிச்சம்.
தான் பேசியது மக்களை எட்டவில்லை என்பதால் பப்ளிசிட்டி தேடி டெல்லி தேர்தல் கமிஷனுக்குப் போனார்,சென்னை வந்த பிரதமர் வாஜ்பாயை விமான நிலையத்தில் சந்தித்தார் (இதனால் விமான நிலையம் செல்லும் தனதுதிட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்தார்). இவை நல்ல போட்டோ ஆப்பர்சூனிட்டையை ரஜினிக்குத் தந்தன. இந்தஇரண்டு நாளும் பத்திரிக்கைகளில் முதல் பக்கங்களில் இடம் பிடித்தார்.
அப்புறம் பா.ம.கவுக்கு எதிராக கேசட் விட்டார், அதை பறிமுதல் செய்ய சொல்லிவிட்டது தேர்தல் கமிஷன்.பா.ஜ.க. கூட்டணியை ஆதரித்து ரஜினி பேசினாலும் அதை ஏற்க அதிமுக கடைசி வரை முன் வரவில்லை. ரஜினிபடத்தை வரைந்த பல அதிமுகவினர் பதவி போனது தான் மிச்சம்.
கடைசி முயற்சியாக ஜூலை மாதம் எடுக்கப் போகும் படத்துக்கு இப்போது அறிவிப்பை வெளியிட்டு தமிழகத்தில்பரபரப்பை ஏற்படுத்தி கவனத்தை தன் பக்கமும், தனது அறிக்கையின் பக்கமுமாகத் திருப்ப ரஜினி முயற்சிசெய்தார்.
ஆனால், ஜக்குபாயா?.. எதுக்கு இந்த பேரு.. ரஜினிக்கு தமிழ் பிடிக்காதா? வடக்கே தமிழ் பேர்ல படம்எடுப்பாங்களா? என்ற புது கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. இப்படி தமிழக நலனுக்காக ரஜினி ஒன்று செய்யவேறொன்றே நடந்தது.
இப்படியாக தமிழக தேர்தல் களத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அரசியல்வாதிகளும் நடிகர், நடிகைகளும்சர்க்கஸ் காட்டி வந்தனர். இதில் யார் யாரை மக்கள் பபூன்கள் ஆக்கப் போகிறார்கள் என்பது வரும் 13ம் தேதிகாலை 11 மணிக்குத் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications