கருணா தரப்புக்கு ராணுவம் உதவி: புலிகள் எச்சரிக்கை
கொழும்பு:
இலங்கைத் தமிழர்களின் ஒரே பிரதிநிதியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை அங்கீகரிப்பதாக திபர் சந்திரிகாகுமாரதுங்காவின் கட்சி அறிவித்துள்ளது.
சந்திரிகாவின் இந்த அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரை புலிகளை இவ்வாறு அங்கீகரிக்காமல்இருந்து வந்த சந்திரிகா, அவர்களுடன் நடந்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளையும் குறைகூறி வந்தார்.
பேச்சுவார்த்தைகளில் பிற தமிழ் அமைப்புகளையும் முஸ்லீம் அமைப்புகளையும் இணைத்திருக்க வேண்டும் என்றுகூறி வந்தார்.
இந் நிலையில் அவரது கட்சி இன்று வெளியிட்ட அறிக்கையில், அமைதிப் பேச்சுவார்த்தையின் இன்றையநிலையையும் நாட்டின் அரசியல் நிலையையும் கருத்தில் கொண்டு பார்க்கையில், விடுதலைப் புலிகளுடன்மட்டுமே அரசு பேச்சு நடத்துவது சரியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
எங்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமரும் கடந்த ஏப்ரல் 30ம் தேதி பத்திரிக்கைக்குத் தந்தபேட்டியில், புலிகள் இயக்கமே தமிழர்களின் ஒரே பிரதிநிதி என்று கூறியுள்ளதையும் சுட்டிக் காட்டவிரும்புகிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அரசு விரும்பினால் பிற அமைப்புகளுடன் தனியாகப் பேசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளைத் தவிர்த்துவிட்டு அமைதி முயற்சி சாத்தியமே இல்லை என்பதால் அவர்கள் விஷயத்தில் சந்திரிகாஅடித்துள்ள பெரிய பல்டி இது.
ராணுவத்துக்கு புலிகள் கடும் எச்சரிக்கை:
தப்பி ஓடிய கருணாவின் படையினர் தங்கள் மீது அவ்வப்போது இலங்கை ராணுவத்தின் உதவியால் தாக்குதல்நடத்தி வருவதாகவும், கருணா தரப்புக்கு உதவி செய்வதை ராணுவம் நிறுத்தாவிட்டால் அமைதி முயற்சிகளுக்குபெரும் பாதகம் ஏற்படும் என்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் எச்சரித்துள்ளது.
இது குறித்து நார்வே அமைதிக் குழுவுக்கு புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் எழுதியுள்ளகடிதத்தில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் மீது தொடர் தாக்குதல் நடந்து வருகிறது. இந்தத் தாக்குதலை நடத்துவதுதப்பியோடிய கருணா தரப்பினர் தான். அவர்களுக்கு ராணுவம் முழு உதவி செய்து வருகிறது.
இது எங்களுடன் ராணுவம் செய்து கொண்ட போர் நிறுத்த உடன்பாட்டுக்கு எதிரானது.
இதை நிறுத்திக் கொள்ளுமாறு இலங்கை ராணுவத்தை வலியுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் போர்நிறுத்தத்துக்கும் அமைதி முயற்சிகளுக்கும் பெரும் கேடு விளையும்.
அந்த விளைவுகளை இலங்கை ராணுவம் சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறோம்.
கோழத்தனமாக எங்கள் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதை நாங்கள் இனியும் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்.
இரு இடங்களில் எங்கள் படையினர் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்குமாறு நார்வே அமைதிக் குழுவின்தலைவர் டிரான்ட் புருஹோவ்டேவைக் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்தக் கடித்ததில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், கருணா தரப்புக்கு தாங்கள் உதவி ஏதும் செய்யவில்லை என இலங்கை ராணுவம் மறுத்து வருகிறது.
இந் நிலையில் நாளை நார்வே வெளியுறவு அமைச்சர் ஜேன் பீட்டர்சன் வன்னிப் பகுதிக்கு வருகிறார். அவர்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்துஆலோசிக்கவுள்ளார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications