தேர்தலுக்கு தமிழகம் தயார்: தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்
சென்னை:
நாளை நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலின் வாக்குப் பதிவுக்கு தமிழகம் தயாராகி வருகிறது.
தமிழகம், புதுவை உள்ளிட்ட 16 மாநிலங்களில் உள்ள 182 தொகுதிகளுக்கு இறுதிக் கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் களத்தில் நிற்கும் 571 வேட்பாளர்களின் தலையெழுத்தை 4.72கோடி வாக்காளர்கள் தீர்மானிக்கவுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 45,729 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் 50,000 மின்னணுவாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. வாக்குப் பதிவு முழுக்க முழுக்க மின்னணு எந்திரங்களில்தான் நடக்கவுள்ளது.
அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும், வாக்குச் சாவடிகளில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும். மற்ற சாவடிகளில் ஒரு எந்திரம் தான் வைக்கப்பட்டிருக்கும்.
மொத்தமுள்ள 39 தொகுதிகளில் சென்னை, கடலூர், கோவை, மதுரை, பெரியகுளம், திருநெல்வேலி,செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 13 தொகுதிகள் மிக அதிகமாக பதற்றம் நிறைந்தவையாக அடையாளம்காணப்பட்டு அங்கு தீவிர கண்காணிப்புக்கும், கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையின் மூன்று தொகுதிகளிலும் வன்முறை அதிக அளவில் நடக்கும் என கருதப்படுவதால், வாக்குப் பதிவைவீடியோவில் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் வாக்குப் பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கும். மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவுமுடிவுக்கு வரும்.
தேர்தல் பணியில் 2.20 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும்இன்றே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளை அடைந்துவிடுவர்.
மாநிலத்தில் 72 சதவீதம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் தரப்பட்டுள்ளன. மற்றவர்கள் பாஸ்போர்ட்,டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட 14 வகையான ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே வட சென்னையில் தான் அதிக அளவாக 20 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த அளவாக9.9 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி பெரம்பலூர் தனி தொகுதியாகும்.
தென் சென்னையில் மிக அதிகமாக 35 பேர் போட்டியிடுவதால் அங்கு மூன்று மின்னணு வாக்குப் பதிவுஎந்திரங்கள் வைக்கப்படவுள்ளனர்.
9 தொகுதிகளில் 16க்கும் அதிகமான வேட்பாளர்களும், 30 தொகுதிகளில் 16க்கும் குறைவான வேட்பாளர்களும்உள்ளனர். பொள்ளாச்சி மற்றும் பெரம்பலூரில் வெறும் 7 பேர் தான் போட்டியில் உள்ளனர்.
கள்ள ஓட்டு போடுபவர்களை உடனடியாகக் கைது செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்குஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடக்கவுள்ளது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications