பெரியகுளத்தில் அமைச்சர் ஓ.பியின் தம்பி அட்டகாசம்
பெரியகுளம் & உசிலம்பட்டி:
பெரியகுளத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஆரூண் ஆதரவாளரின் கார்- மற்றும் வீடுகளை அமைச்சர்பன்னீர்செல்வத்தின் தம்பி உள்ளிட்ட அதிமுகவினர் அடித்து நொறுக்கினர்.
பெரியகுளம் தென்கரையில் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா, ஜெயினுலாவுதீன், மலைமுத்து ஆகியோர்தலைமையில் 50 பேர் கொண்ட கும்பல் கைகளில் கிரிக்கெட் பேட், உருட்டுக்கட்டைகள் வந்து அங்கு ஓட்டு போடவந்தவர்களை அடித்து விரட்டினார்கள்.
இதனையடுத்து அந்த கும்பல் முஸ்லிம் தெருவில் புகுந்து, காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் கொன்று விடுவோம்என்று மிரட்டினர். அப்போது அந்த பகுதியில் நின்றிருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஆருணின் ஆதரவாளரது கார்அடித்து நொறுக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சலீக் முகமது (27), ஹாரூண் (30) ஆகிய இருவருக்கும் தலையில்ரத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திமுக மாவட்ட செயலாளர் மூக்கையா மற்றும் முன்னாள் எம்.பி. வழக்கறிஞர்ஞானகுருசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக பெரியகுளம்தென்கரை காவல் நிலையத்தில் ராஜா உள்பட அதிமுகவினர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பணம் பங்கிடுவதில் தகராறு:
இந் நிலையில் திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டியில் தேர்தல் பணத்தைப் பங்கிடுவதில்அதிமுகவினரிடையே இன்று தகராறு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.
உசிலம்பட்டி மாதரையில் நாகேந்திரன் என்பவர் கிளை செயலாளராக இருந்தார். அண்மையில் செல்வம் என்பவர்புதிய கிளை செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து தேர்தல் செலவுக்காக கட்சி மேலிடம் செல்வத்திடம்பணம் கொடுத்திருந்தது. இதனை பங்கு போட்டுக் கொள்வதில் நாகேந்திரன் மற்றும் செல்வம்தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக பேசியதோடு கட்டிப் புரண்டு சண்டை போடவும் செய்தனர். இதனால்இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டமும் கூடியது. தகவல் அறிந்த உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர்ராமச்சந்திரன் தலைமையில் போலீஸார் விரைந்து வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications