பொன்னையன் பெயர் நீக்கம்: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்
சென்னை:
வாக்காளர் பட்டியலில் இருந்து அமைச்சர் பொன்னையனின் பெயர் நீக்கப்பட்ட விவகாரத்தில் 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதுமே லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதில் அமைச்சர் பொன்னையனின் குடும்பமும் அடக்கம்.
அண்ணாநகரில் வசித்து வரும் பொன்னையன் தனது பெயர் நீக்கப்பட்டது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் தந்தார். இதனை விசாரித்த தேர்தல் கமிஷன், கீழ்ப்பாக்கம் மண்டல அதிகாரி சீனிவாசனை விடுமுறையில் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும் 3 அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.
இந் நிலையில் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். முரசொலியில் அவர் எழுதியிருப்பதாவது:
வருவாய்த்துறை அதிகாரிகள் தான் இந்தப் பட்டியலை தயார் செய்கின்றனர். அவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள். பட்டியலில் அரசு அலுவலர்கள், சிறுபான்மையினர் பெயர்கள் அதிகம் நீக்கப்பட்டுள்ளனர்.
இதில் தங்கள் மீது பழியில்லை என்று காட்டிக் கொள்வதற்காகவே, வேண்டுமென்றே அமைச்சர் பொன்னையனின் பெயரையும் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கி அதை செய்தியாக்கியிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
ஆனால், திமுகவுக்கு சாதகமாக இயங்கும் அரசு ஊழியர்கள் தான் இந்தப் பட்டியலில் வேண்டுமென்றே குளறுபடி செய்ததாக அதிமுக கூறுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க் கட்சியினருக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் திட்டமிட்டே லட்சக்கணக்கானவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இந்த விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந் நிலையில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெரும்பாலான அரசு ஊழியர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications