சோடா பாட்டில் வீசினாரா இன்பத்தமிழன்?
விருதுநகர்:
சிவகாசி மதிமுக வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு நடந்ததையடுத்து அரிவாளால் வெட்டப்பட்ட அமைச்சர் இன்பத் தமிழன்மருத்துவமனைக்குச் சென்றபோது அவரது கார் வழிமறிக்கப்பட்டதாகவும், இதையடுத்து அவர் சோடா பாட்டில் வீசியதாகவும்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சனையில் சிவகாசி அதிமுக வேட்பாளர் கண்ணன் மீது தாக்குதல் நடந்தது. தன்னை மதிமுகவினர் தாக்கியதாககண்ணன் சொல்கிறார். ஆனால், பொது மக்கள் தாக்கியதாக மதிமுக சொல்கிறது.
இந்தத் தாக்குதலையடுத்து விசாரிக்கச் சென்ற அமைச்சர் இன்பத்தமிழன், வழியில் வந்த மதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனின்காரை சுமார் 8 கி.மீ. தூரம் விரட்டிச் சென்றுள்ளார். அமைச்சரிடம் இருந்து தப்ப காரை மிக வேகமாக ஓட்டிச் சென்ற ரவிச்சந்திரன்தனது ஜாதியினரான நாயுடு இன மக்கள் அதிகம் வசிக்கும் வெங்கடாசலபுரம் என்ற ஊருக்குள் வண்டியை விட்டார். ஆனாலும்தொடர்ந்து விரட்டிய இன்பத்தமிழனின் கார், ரவிச்சந்திரனின் காரை இடித்து நிறுத்தியது.
இதன் பின்னர் தன் பாதுகாவலர் வசம் இருந்த துப்பாக்கியை வாங்கி ரவிச்சந்திரனை நோக்கி இன்பத்தமிழன் சுட்டதாக மதிமுகசொல்கிறது. ஆனால், ரவிச்சந்திரனின் ஆதரவாளர்கள் தன்னைத் தாக்கியதால் தனது பாதுகாவலர் சுட்டதாக இன்பத்தமிழன்சொல்கிறார்.
ரவிச்சந்திரனின் காரில் அந்த துப்பாக்கிக் குண்டுகள் பட்டுச் சிதறியுள்ளன. இதில் காரின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. இந்ததுப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ரவிச்சந்திகன் ஒரு வீட்டுக்குள் புகுந்து விட்டார்.
இதையடுத்து இன்பத்தமிழனையும், அவரது பாதுகாவலர் மற்றும் டிரைவரை அப் பகுதியினர் தாக்கினர். இவர்கள்ரவிச்சந்திரனின் ஆதரவாளர்கள் என இன்பத்தமிழன் கூறுகிறார்.
இதைத் தொடர்ந்து இன்பத்தமிழனை போலீசார் காப்பாற்றி அழைத்துச் சென்றனர். சிவகாசி மருத்துவமனையில்முதலுதவி சிகிச்சை பெற்ற, இன்பத்தமிழன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றார்.
அப்போது இன்பத்தமிழனின் காரை வழி மறித்து மதிமுகவினர் கலாட்டா செய்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்தஇன்பத் தமிழன் காரில் வைத்திருந்த சோடா பாட்டில்களை எடுத்து அவர்கள் மீது வீசியதாகவும் தெரிகிறது.
இதையடுத்து இன்பத் தமிழனின் கார் மீது கல்வீச்சு நடந்துள்ளது. இதில் இன்பத் தமிழனுக்கு ஏற்கனவே அடிபட்டிருந்த இடத்தில்மீண்டும் அடிபட்டு ரத்தம் கொட்டியதாகவும் தாங்கள் தலையிட்டு அமைச்சரை அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகவும் போலீசார்கூறுகின்றனர்.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications