ஆட்சியமைக்க பா.ஜ.கவுக்கு ஆதரவு தர மாட்டோம்: கருணாநிதி, ராமதாஸ் திட்டவட்டம்
சென்னை:
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திமுக ஆதரவு தராது என கருணாநிதி இன்றுஅறிவித்தார். மேலும் மத்தியில் அடுத்து எந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் அமைச்சரவையில் திமுக சேராதுஎன்றும் அவர் கூறினார்.
அதேபோல பா.ஜ.கவுக்கு ஆதரவு தரமாட்டோம் என பா.ம.க. நிறுவனர் ராமதாசும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலத்தில் திமுக தலைவர்கருணாநிதி நடந்தது.
இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியை திமுக ஆதரிக்காது. அடுத்துமத்தியில் காங்கிரஸே ஆட்சி அமைத்தாலும் அமைச்சரவையில் திமுக பங்கேற்காது என்றார்.
அடுத்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் தந்த பதில்களும்:
கேள்வி: எந்த அரசிலும் சேருவதில்லை என்பது உங்கள் தனிப்பட்ட முடிவா?
பதில்: இது என் தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் கூட, நான் எடுக்கும் நல்ல முடிவுகளை திமுக பொதுக் குழுவும்செயற்குழுவும் ஏற்கும்.
கேள்வி: மத்தியில் தொங்கு பாராளுமன்றம் உருவானால் உங்கள் கட்சியின் நிலை என்னவாக இருக்கும்?
பதில்: முதலில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகப்பட்டும், அப்புறம் பார்க்கலாம்.
கேள்வி: தேசிய முன்னணி போல மூன்றாவது அணி அமையும் சாத்தியம் உண்டா?
பதில்: அதற்கு வாய்ப்பே இல்லை.
கேள்வி: தேசிய அளவில் முடிவுகள் எப்படி இருக்கும்?
பதில்: இன்னும் ஒரு நாள் உங்களால் பொறுத்திருக்க முடியாதா?
கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சுர்ஜித் உங்களுடன் அடுத்த ஆட்சி குறித்து பேசினாரா?
பதில்: அவர் மே 1ம் தேதி மதுரையில் என்னோடு பேசினார். அப்போது நாங்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களின்அடிப்படையில், அதன் தொடர்ச்சியாகத் தான் நேற்று டெல்லியில் சோனியா காந்தியை சுர்ஜித் சந்தித்தார்.
ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.தேர்தலை மிகச் சிறப்பாக தேர்தல் கமிஷன் நடத்தி முடித்திருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் 99 சதவீதம் சிறப்பாகசெயல்பட்டார் என்றார்.
ராமதாஸ் பாய்ச்சல்:
கூட்டம் முடிந்து வெளியே வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம் நிருபர்கள், நீங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவுதருவீர்களா என்று கேட்டவுடன் கடும் கோபமடைந்த அவர்,
என்ன மறுபடியும், மறுபடியும் இதையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பா.ஜ.கவுக்கு ஆதரவு தர மாட்டோம் என்று ஏற்கனவேஎத்தனை முறை சொல்லிவிட்டேன் என்றார்.
உங்களைச் சந்திக்க ஜார்ஜ் பெர்னாண்டஸ் வருவதாக சொல்கிறார்களே என்று கேட்டபோது, என்ன கேள்வி இது?, காவியைக்கட்டிக் கொண்டு அவரை வேறு எங்காவது போகச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு விருட் என்று சென்றார் ராமதாஸ்.
அமைச்சர் பதவி தந்தால் போதும் பா.ம.க. எந்தக் கூட்டணிக்கும் வரும் என வட நாட்டு டிவி சேனல்களில்செய்திகள் கூறப்பட்டு வருகின்றன. மேலும் பா.ஜ.க. தலைவர்கள் பா.ம.கவுடன் பேசி வருவதாகவும் அவைகூறுகின்றன.
கூடுகிறது பாமக பொதுக் குழு:
இந் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் ராமதாஸின் பண்ணை வீட்டில் வரும் 15ம்தேதி கூடுகிறது.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications