பெரியகுளம், சிதம்பரம் தொகுதிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த கோரிக்கை
சென்னை & டெல்லி:
பெரியகுளம் தொகுதியில் நடந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு, மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்றுதேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி மனு கொடுத்துள்ளது.
அதேபோல் சிதம்பரம் (தனி) தொகுதிக்குட்பட்ட 8 தலித் கிராமங்களில் முழுமையாக மறு வாக்குப் பதிவு நடத்தவேண்டும் என்று தலித் விடுதலைக்கான மனித உரிமைக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிதம்பரம் தொகுதியில் தேர்தலைப் பார்வையிட்ட இந்த அமைப்பு, சிதம்பரம் தொகுதியில் தலித் மக்கள்முழுமையான அளவுக்கு வாக்குகளை செலுத்த அனுமதிக்கப்படவில்லை. பல கிராமங்களில் தலித் மக்கள்வாக்களிக்கக் கூடாது என்று மிரட்டப்பட்டுள்ளார்கள்.
பல பகுதிகளில் குறிப்பிட்ட கட்சிக்காக மட்டுமே ஓட்டுப் போட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.மொத்தமாக 8 கிராமங்களைச் சேர்ந்த தலித் மக்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர்.
13 வாக்குச் சாவடிகளிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளரின் முகவர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாகவெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே சிதம்பரம் தொகுதியில் 8 கிராமங்களில் முழுமையாக மறு வாக்குப் பதிவுநடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
இந் நிலையில், அகில் இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் டெல்லியில் தலைமைதேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில்,
அதிமுக வேட்பாளர் தினகரன் போட்டியிட்ட பெரியகுளம் தொகுதியில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளன.வேட்பாளரும் அரசும் விதிகளை மீறி பல முறைகேடுகளைச் செய்துள்ளனர்.
எனவே, அங்கு நடந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications