இலங்கை: மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவதில் சிக்கல்
கொழும்பு:
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையை எப்போதுதொடங்குவது என்பது குறித்து முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில், நார்வேகுழு இன்று நாடு திரும்பியது.
இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்த நார்வே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பீட்டர்சன் மற்றும் வெளியுறவுத் துறைஇணை அமைச்சர் விடார் ஹெல்ஜெசன் ஆகியோர் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து இருவரும் இன்று நார்வேதிரும்பினர். முன்னதாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,
அமைதிப் பேச்சுவார்த்தையில் நார்வே தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்று இரு தரப்பும் வேண்டுகோள் விடுத்தன.
பேச்சுவார்த்தையை எங்கு நடத்துவது, பேச்சுவார்த்தையின் அம்சங்கள் குறித்து இலங்கை அரசுக்கும், புலிகள் இயக்கத்துக்கும்இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதற்கு முன்பு நடந்த 6 கட்ட பேச்சுவார்த்தையைப் போலவே, இனி மேற்கொள்ளவிருக்கும்பேச்சுவார்த்தையையும் வெளிநாடுகளில் நடத்த புலிகள் இயக்கம் விரும்புகிறது.
ஆனால், இலங்கைக்குள்ளேயே பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என சந்திரிகா அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து உடன்பாடு ஏற்பட்ட பிறகே அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முடியும்.
வரும் வாரங்களில் இலங்கை அரசுடனும், புலிகளுடனும் நார்வே தொடர்ந்து ஆலோசனை நடத்தும் என்று தெரிவித்துள்ளனர்.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்












Click it and Unblock the Notifications