குஜராத், ஆந்திரா, மே.வங்கத்தில் பாஜகவுக்கு சரிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ள பாஜவுக்கு குஜராத்தில் அதிர்ச்சித்தோல்வி ஏற்பட்டுள்ளது. இங்குள்ள 26 இடங்களில் காங்கிரஸ் 13 இடங்களைப் பிடித்துள்ளது.

முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று,காங்கிரசை காலி செய்தது. இந் நிலையில் பாதிக்குப் பாதி இடங்களைப் பிடித்து, அம் மாநிலஇடங்கள் அனைத்தும் தங்களுக்கே கிடைக்கும் என நம்பியிருந்த பாஜகவின் கனவை காங்கிரஸ்கலைத்துள்ளது.

இந்த மாநிலத்தில் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட துணைப் பிரதமர் அத்வானி வெற்றிபெற்றார்.

ஆந்திராவில் தோல்வி:

அதே போல ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய தெலுங்கு தேசம்- பா.ஜ.ககூட்டணிக்கு மக்களவைத் தேர்தலிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை 36 இடங்களைப்பிடித்த இக் கூட்டணிக்கு இம் முறை வெறும் 5 இடங்களே கிடைத்துள்ளன. இதில் பா.ஜ.கவுக்கு ஒருஇடமும் கிடைக்கவில்லை.

மேற்கு வங்கத்திலும் தோல்வி:

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரசும் அக் கட்சியுடன் கூட்டணி அமைத்தபா.ஜ.கவும் படுதோல்வி அடைந்துள்ளன.

அம் மாநிலத்தின் 39 இடங்களில் 33 தொகுதிகளை இடதுசாரிக் கூட்டணி கைப்பற்றியுள்ளது. மற்ற 5இடங்களை காங்கிரஸ் பிடித்துள்ளது.

திரிணமூல்-பாஜக கூட்டணியில் வெற்றி பெற்றுள்ளது மம்தா மட்டுமே. கடந்த தேர்தலில் இங்கு 7தொகுதிகளில் மம்தாவின் கட்சி வென்றது. பாஜகவுக்கு இரு எம்பிக்கள் கிடைத்தனர். இம்முறை இந்தஇரு இடங்களையும் பாஜக இழந்துள்ளது.

மகாராஷ்டிரத்தில்...

குஜராத்தைப் போலவே மகாராஷ்டிரத்திலும் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு காங்கிரஸ் கடும்போட்டியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ்-சரத்பவார் கூட்டணி 17 இடங்களையும் பாஜக-சேனாகூட்டணி 17 இடங்களையும் பிடித்துள்ளன.

மத்திய அமைச்சர்களான ராம்நாயக், ஜெயவந்தி ஆகியோர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.பெட்ரோலிய அமைச்சரான நாயக்கை நடிகர் கோவிந்தா தோற்கடித்தார்.

நாடாளுமன்ற சபாநாயகரும் சிவசேனை முக்கியஸ்தருமான மனோகர் ஜோஷியும்தோல்வியடைந்தார்.

ராஜஸ்தான், மபி, கர்நாடகத்தில் வெற்றி:

அதே நேரத்தில் கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 12 இடங்களிலும், ராஜஸ்தானில்உள்ள 25 இடங்களில் 21 தொகுதிகளிலும் பா.ஜ.க. வென்றுள்ளது.

அதே போல மத்தியப் பிரதேசத்திலும் பா.ஜகவுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. இங்கு 19இடங்களில் பாஜகவும் காங்கிரஸ் நான்கே இடங்களிலும் வென்றுள்ளன.

6 மாதங்களுக்கு முன் இங்கு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் கிடைத்த வெற்றியை வைத்துத் தான்,பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரின் யோசனைப்படி 8 மாதத்துக்குமுன்னதாகவே மக்களைவையைக் கலைத்துவிட்டு தேர்தலை பாஜக சந்தித்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+