சாதித்த மாணவ, மாணவிகள்
சென்னை:
பிளஸ் டூ தேர்வுகளில் இந்த முறையும் சென்னையை விட பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்தான்முதலிடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
திருச்சி புனித ஜோசப் ஆங்கிலோ இந்திய மேல் நிலைப் பள்ளி மாணவி நிவேதிதா 1,200க்கு 1,183 மதிப்பெண்கள்எடுத்து மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை எஸ்.வி.மந்திர் மெட்குலேஷன் பள்ளி மாணவி நந்தினி 1,190மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், அதே பள்ளியைச் சேர்ந்த சரண்யா தேவி, உதயகுமார் ஆகியோர்தலா 1,178 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களில் 76.03 சதவீதம் பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இது 1.01 சதவீதம் அதிகமாகும். வழக்கம் போல மாணவர்களை விடமாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சமீப காலமாக சென்னையைச் சேர்ந்த மாணவ, மாணவியர் முதலிடங்களைப் பெறுவது குறைந்து வருகிறது. பிறமாவட்டங்களைச் சேர்ந்த, குறிப்பாக பின் தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே, ரேங்க் பெற்று சாதனைபடைத்து வருகின்றனர்.
இந்த முறையும் அப்படியே நடந்துள்ளது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் தல் ஐந்துஇடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
திருச்சி மாணவி நிவேதிதா 1,200க்கு 1,183 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார்.
தர்மபுரி மாணவி நந்தினி இரண்டாவது இடத்தையும், அதே மாவட்டதைத்தின் அதே பள்ளியைச் சேர்ந்த சரண்யாதேவி, உதயகுமார் ஆகியோர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பரிமளம் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த ஹரீஷ், வேலூர் வாணிவித்யாலயா மெட்குலேஷன் பள்ளி மாணவர் ஸ்ரீதரன் ஆகியோரும் 2வது ரேங்க் பெற்றுத் தேறியுள்ளனர்.
இதுதவிர தர்மபுரி ஸ்ரீ விஜய் விபி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் ஹேமானந்த், சென்னை நங்கநல்லூர்பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி தரணி, சென்னை சுவாமி மெட்குலேஷன் பள்ளி மாணவர் பார்த்தசாரதிஆகியோரும் ரேங்க் பெற்றுள்ளனர்.
தமிழை ஒரு மொழிப் பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்கு மட்டுமே ரேங்க் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் திருச்சி மாணவி நிவேதிதா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இருப்பினும் பாண்டிச்சேரியைச்சேர்ந்த மாணவர் மனோஜ் சக்கரவர்த்திதான் அதிகபட்சமாக 1,200க்கு 1,189 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பிளஸ் டூ தேர்வை மொத்தம் 5, 54,961 பேர் எழுதினர். இவர்களில் 2,92,204 பேர் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டமதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் 2,21,504 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இயற்பியல் (625), வேதியியல் (644), வணிகம் (118) ஆகியவற்றில் சதம் அடித்தவர்களின் எண்ணிக்கைவெகுவாக குறைந்துள்ளது. அதே சமயம், கணிதம் (1433), கம்ப்யூட்டர் அறிவியல் (217), உயிரியல் (655),கணக்கியல் (725) ஆகியவற்றில் சதம் அடித்துள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டுஅதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications