ஜெ. மீது புகார்: திருநாவுக்கரசரிடம் விளக்கம் கேட்கிறது பாஜக
சென்னை:
தமிழகத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்ததற்கு ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்ததே காரணம் என்றுமுன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக பாஜக தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோவையில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டிஅளித்தார்.
அவர் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தபோது அதிமுக அரசை கலைக்கச் சொல்லி நிர்பந்தித்தது திமுக. அதைஏற்காததால் தான் விலகினார்கள். இப்போது வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் ஜெயலலிதா அரசைக் கலைக்கச்சொல்லி ராமதாஸ் மூலமாக தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
அதிமுக-பா.ஜ.க. கூட்டணிக்காக உழைத்த தொண்டர்கள், ரஜினி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுகவும், பாஜகவும் சேர்ந்துதான் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை சந்தித்தன. எனவே இப்போது கிடைத்துள்ளதோல்விக்கு இரு கட்சிகளுமேதான் காரணம். ஒரு கட்சியை மட்டுமே குறை சொல்ல முடியாது.
மத்தியில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பியதால்தான் படுதோல்வி கிடைத்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதும்சரியல்ல, அது கூட்டணி தர்மமும் அல்ல.
அதிமுகவுடன் கூட்டு சேர்ந்ததால்தான் படுதோல்வி கிடைத்துள்ளதாக புகார் கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர்திருநாவுக்கரசரிடம் விளக்கம் கேட்போம். விரைவில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ததற்குநன்றி தெரிவிப்பேன். அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்றார்.
இதனால் தமிழக பா.ஜ.கவில் விரைவில் மோதல் வெடிக்கலாம் என்று தெரிகிறது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications