திமுகவினரின் வெற்றி ஊர்வலத்தில் அதிமுக-வி.எச்.பி. கல்வீச்சு
ராமேஸ்வரம்:
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பவானி ராஜேந்திரனின் வெற்றியைக் கொண்டாடும்விதத்தில் திமுக கூட்டணியினர் நடத்திய ஊர்வலத்தில் அதிமுக தொண்டர்கள் கல்வீச்சு நடத்தியதால் ராமேஸ்வரத்தில் பதற்றம்ஏற்பட்டது.
ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் பவானி ராஜேந்திரன் வெற்றி பெற்று எம்.பி. ஆகியுள்ளார். இதைக் கொண்டாடும்விதமாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தொண்டர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள வேர்கோடு என்ற இடத்திலிருந்து ஊர்வலமாகசென்றனர்.
வழியெங்கும் பலருக்கும் இனிப்பு கொடுத்தும், வாக்காளர்களுக்கு நன்றி சொல்லிய வண்ணமுமாக அவர்கள் சென்றபோது,திடீரென அதிமுகவைச் சேர்ந்த சிலர் அங்கு வந்தனர். திமுக கூட்டணியினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செந்தில் என்பவர் காயமடைந்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. திமுககூட்டணியினரும் பதில் தாக்குதலில் இறங்க முற்பட்டபோது போலீஸார் வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.
பின்னர் தாக்குதல் நடத்திய அதிமுக, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்களை கைது செய்யக் கோரி ராமேஸ்வரம்டவுன் காவல் நிலையம் முன் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுகவினர் மீது புகாரும் கொடுத்தனர்.
இதையடுத்து அதிமுக, வி.எச்.பியினர் 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல, அதிமுகவினர்கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுக கூட்டணியைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications