ஆர்எஸ்எஸ், பாஜக ஆதரவு கவர்னர்கள் பதவி காலி
டெல்லி:
காங்கிரஸ் அரசு பதவியேற்றவுடன் மாநில கவர்னர்களாக உள்ள ஆர்.எஸ்.எஸ்சைச் சேர்ந்த 5 பேரின் பதவிகளும்முதலில் பறிக்கப்படும் என்று தெரிகிறது.
அதே போல சந்திரபாபு நாயுடுவின் பரிந்துரையால் கவர்னராக நியமிக்கப்பட்ட தமிழக ஆளுநர் ராம்மோகன்ராவும் நீக்கப்படவுள்ளார். இவரை நீக்க வேண்டும் என திமுகவும் கோரிக்கை வைக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதருக்கு இணையாக ஒரு பதவியை உருவாக்கி, நியூயார்க்கில் பெரியஅலுவலகம் அமைத்து, சிறப்பு இந்தியத் தூதராக நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் அக்னிஹோத்ரியைமுதலில் பதவி நீக்கம் செய்வோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சோனியாவின் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்படும் நட்வர் சிங் இன்று இதனைத்தெரிவித்தார்.
ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிஹோத்ரிகளுக்கு எல்லாம் முதலில் விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்புவோம் என்றுகூறிய நட்வர்சிங், அவரைப் போலவே சர்வதேச பதவிகளில் அமர்த்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி.,பாஜகவினரும் நீக்கப்படுவர் என்றார்.
அமெரிக்கா, பிரிட்டனுக்கான தூதர்களும் மாற்றப்படுவர் என நட்வர் சிங் தெரிவித்தார்.
அதே போல ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவர்களான பாண்டிச்சேரி ஆளுநர் ஜா, குஜராத் ஆளுநர் கைலாஷ்பதிமிஸ்ரா, பிகார் ஆளுநர் ராமாஜோய்ஸ், கோவா ஆளுநர் சகானி, உத்தரப் பிரதேச ஆளுநர் விஷ்ணுகாந்த் சாஸ்திரிஆகியோரின் பதவிகளும் பறிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அதே போல சோனியாவுடன் மோதிவிட்டு பா.ஜ.கவுக்கு ஆதரவாக மாறி, செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராகநியமிக்கப்பட்ட நஜ்மா ஹெப்துல்லாவும் நீக்கப்படவுள்ளார்.
இவர்களைத் தவிர பா.ஜ.கவைச் சேர்ந்த கர்நாடக ஆளுநர் சதுர்வேதி, பா.ஜகவுக்கு வாக்கு கேட்ட ஹரியாணாகவர்னர் பாபு பிரேமானந்த் ஆகியோரும் நீக்கப்படுவர் என்று தெரிகிறது.
இந்த மாற்றங்களை எதிர்பார்த்தே திட்டக் கமிஷனன் துணைத் தலைவர் கே.சி.பந்த் தனது பதவியை இருதினங்களுக்கு முன் ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உள்துறை, பாதுகாப்புத்துறை, உளவுப் பிரிவுகளில் உள்ள முன்னாள் பாஜக அமைச்சர்களுக்கு, அரசுக்குநெருக்கமான அதிகாரிகளும் கூண்டோடு மாற்றப்படுவர் என்று தெரிகிறது.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications