கருணாநிதி, சுர்ஜித், லாலுவுடன் சோனியா சந்திப்பு
டெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காலை திமுக தலைவர் கருணாநிதி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்கிசன்சிங் சுர்ஜித், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் யாதவ்ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
மன்மோகன் பிரதமராக்க ஆதரவளிக்குமாறு அவர்களிடம் சோனியா கேட்டுக் கொண்டார்.
சோனியா பிரதமராகவே மக்கள் வாக்களித்துள்ளதாகக் கூறிய கருணாநிதி, சோனியா எடுக்கும் எந்தமுடிவையும் ஆதரிப்பதாகவும் உறுதிமொழி கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இச் சந்திப்பின்போதுகாங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்துக்கும் உடனிருந்தார்.
அப்போது அமைச்சரவையில் திமுக சேர வேண்டும் என சோனியா மீண்டும் வலியுறுத்தினார்.
மன்மோகன் சிங்கை பிரதமராக ஏற்பதில் இடதுசாரிக் கட்சிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனசோனியாவிடம் சுர்ஜித் தெரிவித்துள்ளார். அதே போல சோனியா சொல்லும் யாரையும் பிரதமராகஏற்கத் தயார் என்று அறிவித்துள்ளார்.
சோனியாவுடனான சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய லாலு, பதவியை விட்டுத் தந்தசோனியாவின் பெருந்தன்மையைக் கண்டு வியக்கிறேன். இதமூலம் வாஜ்பாய், ஆர்.எஸ்.எஸ்.ஆகியோரின் வாய்களை அடைத்துள்ளோம். இனி மக்களிடம் இவர்கள் எந்த முகத்தோடு போய்நிற்பார்கள் என்று தெரியவில்லை என்றார்.
அதே போல பிற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடனும் சோனியா பேசி வருகிறார்.
சோனியாவின் கோரிக்கையை அனைத்துக் கட்சிகளும் ஏற்கும் என்றே தெரிகிறது. கூட்டணியில்இல்லாத சமாஜ்வாடி கட்சியும் சிங்கை பிரதமராக ஏற்க முன்வந்துள்ளது.
இந் நிலையில் ஹர்கிசன் சிங் சுர்ஜித்தை மன்மோகன் சிங்கும் தனியே சந்தித்து ஆலோசனைநடத்தினார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications