பிரதமராகிறார் மன்மோகன் சிங்: காங். தலைவர்கள் கோரிக்கைகளை நிராகரித்தார் சோனியா
டெல்லி:
பிரதமர் பதவியேற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள், நிர்வாகிகள், மூத்த தலைவர்கள்விடுத்த வேண்டுகோளை சோனியா காந்தி நிராகரித்துவிட்டார். இதையடுத்து அந்தப் பதவிக்குடாக்டர் மன்மோகன் இன்று தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
மன்மோகன் சிங்கை தேர்வு செய்யும் தீர்மானத்தை தனது எம்.பிக்கள் மத்தியில் சோனியா இன்றுகாலை சுற்றுக்கு விட்டார். இதில் கையெழுத்திடுமாறு அவர் கோரியுள்ளார்.
அவர்கள் அனைவரும் கையெழுத்திட்ட பின், மாலையில் மீண்டும் காங்கிரஸ் எம்.பிக்களின் கூட்டம்நடக்கவுள்ளது. அதில் பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கின் பெயரை சோனியா முன்மொழிவார்.
இதற்கிடையே கூட்டணித் தலைவர்களிடமும் பேசிய சோனியா, மன்மோகன் சிங்குக்கு ஆதரவுதெரிவிக்கும் அவர்களது கடிதங்களையும் கேட்டுப் பெற்றார்.
இந்தக் கடிதங்களுடன் மன்மோகன் சிங்கையும் அழைத்துக் கொண்டு இன்றிரவு 8 மணிக்குஜனாதிபதி அப்துல் கலாமை சோனியா சந்திப்பார் என்று தெரிகிறது. இதனால் மன்மோகன் சிங்பிரதமராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
ஆனாலும் சோனியா தான் பிரதமராக வேண்டும் என நேற்று மாலையில் இருந்து அவரதுஇல்லத்தின் முன் காங்கிரஸ் தொண்டர்கள் இன்றும் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்திக்கொண்டுள்ளனர்.
சோனியாவுக்குப் பதிலாக மன்மோகன் பிரதமராகலாம் என்று செய்தி வழங்கி, லைவ் ரிலே செய்துகொண்டிருந்த தனியார் டிவி குழுவினரை காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கினர். சோனியா தான்பிரதமராவார் என்று கூறியவாரே இத் தாக்குதலில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் தலையிட்டுவிரட்டியடித்தனர்.
71 வயதான மன்மோகன் சிங், இந்திய ரிசர்வ் வங்கியில் கவர்னராக இருந்தவர். ஆக்ஸ்போர்ட்பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டி.லிட் பட்டம் பெற்றவர். உலக வங்கியிலும்பணியாற்றியவர்.
நரசிம்மராவ் பிரதமரானபோது இவரை நிதியமைச்சராக்கினார். அதன் பின்னர் காங்கிரசில் முக்கியஇடம் பிடித்தார். நேர்மைக்கும், எளிமைக்கும் பெயர் போன சிங், சோனியாவுக்கு நெருக்கமானகாங்கிரஸ் தலைவரர்களில் ஒருவராவார்.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது











Click it and Unblock the Notifications