அதிமுகவில் வருகிறது அதிரடி மாற்றம்
சென்னை:
மக்களவைத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்துள்ளதால், அதிமுகவில் விரைவில் அதிரடி மாற்றங்களைச் செய்யமுதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தோல்வியிலிருந்து இன்னும் ஜெயலலிதா மீளவில்லை. தோல்வி கொடுத்த பாடத்தால் பலஅதிரடி வாபஸ் அறிவிப்புகளை வெளியிட்ட அவர், கட்சியில் களையெடுப்பைத் தொடங்கவுள்ளார்.
கட்சி அளவில் மட்டுமல்லாமல் அமைச்சரவையிலும் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட கடுமையான அதிருப்தியை அதிமுகவினர்சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என ஜெயலலிதா நினைக்கிறார். கட்சிக்குள் பரம விரோதிகளாக இருக்கும்பல காங்கிரஸார், மக்களவைத தேர்தலின்போது மிகுந்த ஒற்றுமையுடன் இருந்து செயல்பட்டனர்.
ஆனால் அதிமுக சார்பில் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், அமைச்சர்கள்காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியை சரிவர பயன்படுத்தி ஓட்டுக்களை சிதறடிக்கவில்லை.
மேலும் அதிமுக வேட்பாளருக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று ஜெயலலிதா காதுகளுக்கு செய்திபோயுள்ளது. இதனால்தான் சில தொகுதிகளில் தோற்கக் கூடும் என்று கருதப்பட்ட காங்கிரஸ் கட்சி போட்டியிட்டஅத்தனை இடங்களிலும் வென்று விட்டதாக ஜெயலலிதாவுக்கு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
குறிப்பாக திருச்செங்கோடு, கோபிச்செட்டிப்பாளையம், ராசிபுரம், சேலம் ஆகிய தொகுதிகளின் பொறுப்பாளர்கள்மீது ஜெயலலிதா கடும் அதிருப்தியில் உள்ளார். இவை எல்லாம் அதிமுகவின் கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் கட்சி அளவிலும், அமைச்சரவை அளவிலும் ஜெயலலிதா பெரும் மாற்றத்தை செய்யவுள்ளார்என்பதுதான் கோட்டை வட்டாரத்திலும், அதிமுக வட்டாரத்திலும் இப்போதைய பேச்சாக உள்ளது.
-
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications